உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 38

அரண்மனையே விழாகோலம் பூண்டிருந்தது என்று தான் சொல்லவேண்டும். திருமணத்திற்கு வராதவர்கள் கூட இனி எதிர்ப்புக் காட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது புரிந்து வந்துவிட்டனர். சகுந்தலா தேவி வைர காப்புடன் முறைசெய்யத் தொடங்க, விஜயரேகா தன் பங்கிற்கு இரண்டு வைர வளையல்களை பூட்ட, நந்தினியின் தாய்க்கு மனம் லேசாக சுனங்கியது. தங்களால் இந்த அளவுக்கு செய்யமுடியவில்லையே என்னும் வருத்தம் வரத்தான் செய்தது. அதன் பின் ஒவ்வொரு உறவு முறையும் அவரவர் உறவுக்கு ஏற்றது போல் நவரத்தினங்களில் வளையல்Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 38”

உறவாய் உயிராய்…!!! அத்தியாயம்#16

“புதிதாய் திருமணமானவர்கள் தேனிலவுக்கு எங்கேனும் சென்று வாருங்கள்” என மனுவின் தந்தை சங்கரன் சொல்ல, “இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை. வேலை பளு ரொம்ப அதிகமாயிருக்கு. நேரம் கிடைக்கும் போது போகிறோம்.” என முடித்துக் கொண்டான். மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க விரும்பிய வேணியும், சங்கரனும் திருக்கோவில் சுற்றுலாவிற்கு கிளம்பிவிட்டனர். அதன் பிறகு வீட்டை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பும் மதுவிடம் வந்து சேர்ந்தது. https://drive.google.com/file/d/19ei_N9auxqnQi3UPZzJU6xeqru5idy7N/view?usp=sharing

உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #15

“நீ எடுத்து வச்சுவிடும்மா குழந்தை…” வாஞ்சை வழிய சொல்ல, தீபத்தை தொட்டு தன் கரம் உயர்த்தி அவன் கண்களுக்கருகே கொண்டு செல்ல, அவன் பின்னோக்கி சாய, “இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி அடம்?” அன்னை போல் கண்களில் கண்டிப்புக்காட்டி மிரட்டியவள் அவன் கரத்தை அழுந்த பற்றி முன்னோக்கி இழுத்து விபூதியை கீற்றாய் வைத்துவிட்டு அதன் துகள்கள் கண்களுக்குள் விழுந்துவிடக் கூடாதென திருநீருக்கு கீழே நெற்றியில் கரம் பதித்து விழிகளுக்கு தடுப்பை உருவாக்கி உதடு குவித்து ஊதினாள். பெற்றவளின் நினைவில்Continue reading “உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #15”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#14

‘கணவனோடு கோவிலுக்கா? என்ன சொல்வானோ தெரியவில்லையே…’ எனும் உதறல் எடுக்க, “பேசி பார்க்கிறேன் அத்தை…” என எச்சில் கூட்டி விழுங்கியபடி அவனுக்கான க்ரீன் டீயை கலந்து கொண்டு மேலே செல்ல, மனுபரதன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை வழிய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான். “குட் மார்னிங், மனு சார்… டீ” என டிரேயை அவன் முன் நீட்ட தன் பார்வையை உயர்த்தாமலே, “குட்மார்னிங்” என கோப்பையை எடுத்துக் கொண்டான். ‘அலுவலகத்திற்கு லீவ் போட வேண்டுமென்றால் பல நாட்களுக்குContinue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#14”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #37

தான் கொடுத்ததை உண்ணவில்லை… தன்னை டின்னருக்கு அழைக்கவில்லை… இவனாகவே அனைவரிடமும் ‘நான் வரமுடியாது’ என்கிறான். என்னை ஏன் அவாய்ட் பண்றான்? தேம்பி அழ, நிவியின் பிறந்தநாளின் போது அவன் கொடுத்த பரிசை, தான் இன்று வரை பிரித்துப் பார்க்கவில்லையென்பது உரைக்க, அதைத் தேடி கண்டுபிடித்து பிரித்துப் பார்க்க… செர்ரி ரெட்டில் முத்து வேலைப்பாடுகள் செய்த டிசைனர் புடவை இருந்தது. புடவையின் மீது பெரிய ஈடுபாடில்லாதவளையே கவர்ந்து விட்டது அந்தப் புடவை. அவனோடு எங்கும் வரமுடியாது என்று சொன்னதால்Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #37”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#13

“அதிகபட்சம் ஒரு வருஷம் தான், அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்” என்று தம்பியை சமாதானப்படுத்தும் பொருட்டு, மதுரா வார்த்தைகளை விட்டுவிட ப்ரியவும், ரிஷியும் அதிர்ந்து நோக்க, “ப்ரெக்னன்ட் ஆனா அம்மா வீட்டுக்கு வர்ற முறை இருக்கே… அதை சொல்றா… நீங்க என்ன நினைச்சு இப்படி ஷாக் ஆனீங்க?” என்று மனுபரதன் விசாரிக்க, “ஹி… ஹி… நீங்க கரெக்ட்டா தான் போறீங்க. நாங்க தான் தப்பா நினைச்சுட்டோம்…” என்று இருவரும் அசடு வழிந்து சமாதானமாயினர். மதுராவை கண்ணாடியில் நோக்கியவன்Continue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#13”

அன்புள்ள மாயவனே…!!!

காலை வணக்கம் தோழமைகளே… இனிய செய்தியுடன் வந்திருக்கிறோம். காதலர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டிற்கு சிறப்புப் பரிசாய் டீசர்கள் கொடுத்தோமே “அன்புள்ள மாயவனே…!!!” எனும் கதை, அது இப்பொழுது அமேசான் கிண்டலில் படிக்கக் கிடைக்கும். விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம். இக்கதை காதல், பிரிவு, மீண்டும் காதல் என பின்னப்பட்டிருக்கும் ஒன்று. கதைக்களம் மதுரைக்கு அருகில் இருக்கும் தேனூர் மற்றும் நவநாகரிக நகரமான புதுடில்லி. மெக்கானிக் செட் வைத்திருக்கும் மாயழகன் தான் கதையின் நாயகன். அண்ணனின்Continue reading “அன்புள்ள மாயவனே…!!!”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #36

காதல் கொண்ட மனமாயிற்றே, மனையாளுக்காக வருந்தியது. ஆனாலும் மன்னிக்க மறுத்தது. வெகு நேரத்திற்குப் பிறகும் தூங்க முடியாமல், “அம்மா!” என அழைத்தபடி தன் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தான். அவர்கள் வீட்டில் எப்போதுமே அது தான் வழக்கம். அந்த ஒற்றை அறை அவனுடையது. படிப்பு, படுக்கை அனைத்தும் அங்கு தான்! பெற்றோர் ஹாலில் தான் படுப்பார்கள். மகனது குரலைக் கேட்டு எழுந்தமர்ந்தவர், “என்னப்பா? ஏதாவது வேணுமா?” என்றார் பாசத்துடன். மெல்ல அவரருகே வந்தவன், அன்னைக்கும், தந்தைக்கும் நடுவில்Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #36”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #12

மறுநாள் காலை வேலைக்கு சென்றவளுக்கு சற்றே படபடப்பாய் இருந்தது. இயல்பாகவே மனுபரதனிடம் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். அவளை மணக்கக் கேட்ட பின் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ‘நேற்று பேசியது நிஜமா? அல்லது நக்கல் சிரிப்புடன் நாவினால் சாட்டை வீசுவாரா?’ என்று தனக்குள் விதவிதமாய் யோசித்துக் கொண்டிருக்க மனுபரதன் புயலென அலுவல் அறைக்குள் நுழைய, மரியாவைப் போல அவளும் அவனது அறைகுள்ளேயே இருந்ததால் விசுக்கென எழுந்து நின்று முகமன் சொல்ல, கண்களால் கண்களைContinue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #12”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 35

காலை, அவள் கண் விழிக்கும் போது அவன் அலுவலகம் சென்றிருந்தான். மெல்ல எழுந்து அமர்ந்தவளுக்கு தலை கிறுகிறுத்தது. கூடவே, வலிக்கவும் செய்தது. வெகு சிரமப்பட்டு எழுந்தவள், பதறி அமர்ந்துவிட்டாள். “நான் ஜீன்ஸ் தானே போட்டிருந்தேன்? இது எப்போ… எப்படி மாற்றினேன்?” எனத் தலையை பிடித்துக் கொள்ள, அவன் அறைந்தது தவிர வேறொன்றும் ஞாபகம் வரவில்லை. அவளாகவே, கணவன் தன்னிடம் அத்து மீறியதாகவும், அவனுக்கு உடன்படாததால் அடித்திருக்கிறான் என்றும் நினைத்துக் கொண்டு, அவனைத் தொடர்பு கொள்ள, எப்பொழுதும் “சொல்லுமா…”Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 35”