மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #19

மாலை வணக்கம் தோழமைகளே… இதுவரை இக்கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல. கதையின் லிங்க் புதன்கிழமை (9. 11.2022) வரை இருக்கும். மீண்டும் புதுவருடத்தில் புது கதையுடன் உங்களை சந்திக்கிறோம். அன்புடன்,அம்மு யோகா. வாழ்க வளமுடன். படுக்கையில் அமர்ந்தபடி பலவிதமாய் யோசித்தாலும் அர்ச்சனாவுக்கு கணவனிடம் தனது நம்பிக்கையை நிரூபிப்பதற்கான வழி தான் தெரியவில்லை. சென்னைக்கு தனியாளாய் வந்த அன்னலெட்சுமியை கண்ட முத்துராமன், “என்ன நீ மட்டும் வந்திருக்க? அர்ச்சனாவும், அகிலனும் எங்க?” என கேள்வி எழுப்ப… https://drive.google.com/file/d/1cZoM-OSzwbFoFvKHnJIrz_nsWoh-P6IO/view?usp=sharing

மன்னிக்கவும்.

காலை வணக்கம் தோழமைகளே… நேற்று இரவு வீட்டில் பூஜை முடிய வெகு நேரமாகிவிட்டதால் பதிவு கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். நிச்சயம் இன்று இரவு பதிவு வரும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #18

மகனுக்கு தோசை வார்த்துக் கொடுக்கும் கணவனை விழிகளால் விழுங்கியபடி அர்ச்சனா நிற்க, “அப்பா, உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான் அகிலன். “தெரியுமே! என் அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க.” “அச்சுமா! உனக்கு பாட்டி சமைக்க கத்துக் கொடுக்கலையா? அதான் நீ சமைக்க மாட்டேங்கிறியா?” பிள்ளை அன்னை முகம் பார்க்க, “நான் நல்லா சமைப்பேன்டா!” அர்ச்சனா சொல்ல நம்பாத்தன்மையுடன் பார்த்தவன், “நீ சமைச்சு நான் பார்த்ததே இல்லை..!” என தோள்களை குலுக்க, “டேய்! நான் நிஜமாவேContinue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #18”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #17

“மாம்ஸ்! இத்தனை நாளா உன் நினைவடுக்கில் மறைந்திருந்த இந்த ஒற்றை வார்த்தை இப்போ மட்டும் எப்படி வெளிய வருது? நான் உன்னை தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு காதல் நாடகம் போடுறியா அர்ச்சனா?” என்றதும் தன் கணவனா இப்படி பேசுவது என்று திகைத்துப் போய் நிற்க, “நீ என்னோட வாழ வந்திருக்கங்கிற நம்பிக்கையில தான் என் அப்பத்தா நிம்மதியா போய் சேர்ந்துடுச்சு. காரியம் முடியுற வரைக்கும் இங்கயே இரு. உன்னை கும்பிட்டு கேட்டுக்கிறேன். அதுக்கு முன்னாடி கிளம்பி அப்பத்தாவோடContinue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #17”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #16

“நீங்க சொன்ன எதையும் என்னால மறுக்க முடியாதது தான் பிரச்சனை. உங்க மேல அளவுக்கு அதிகமா அன்பும், காதலும் இருக்கிறதால தான் உங்களை யார் கூடவும் பங்கு போட முடியல. என்னோட பலமும் நீங்க தான்! பலவீனமும் நீங்க தான்! உங்களை மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் முடியாது. நீங்க கொஞ்சம் கரிசனமா பேசுனாவே நான் என் கண்ட்ரோலை இழந்துடுவேன். ஒவ்வொரு தடவை நீங்க சென்னைக்கு வரும் போதும் உங்களோட பேச்சு, சிரிப்பு, அன்மை இதெல்லாம் என்னை அநியாயத்துக்குContinue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #16”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #15

“நான் எங்கேயும் வரலை. இப்போ நான் இங்க வந்திருக்கிறது குலதெய்வத்தை கும்பிடத் தானே தவிர உங்க கூட குடும்பம் நடத்த இல்லை. நாளைக்கு இங்கிருந்தே கோவிலுக்கு வந்துட்டு சாயங்காலம் சென்னைக்கு கிளம்பிடுவோம். நீங்க போகலாம்.” அவனது விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் எங்கேயோ வெறித்தபடி சொன்னாள். “அப்போ நீ என் கூட வரப் போறதில்லை…?” என்றவனிடம் லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது. “இல்லை…!” ஒற்றையாய் வந்து விழுந்தது வார்த்தை. “சரி, நீ இங்க சீராடு. நான்Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #15”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #14

‘எல்லோர் முன்னிலையிலும் என்ன செய்கிறான் இவன்?’ அவள் திகைத்து நிற்க, வரி வரிக் கோடுகளாய் தன் விரல் தடம் பதிந்திருந்த கன்னத்தை கண்டவனுள் பெரும் வேதனை சூழ்ந்தது. ‘கொஞ்சமும் யோசிக்காம கண்டதையும் உளறி இப்படி காயப்பட்டு போறியேடி… எல்லா விஷயத்திலும் பொறுமையா இருக்க எனக்கு இந்த விஷயத்தில் மட்டும் பட்டுன்னு கோபம் வந்துடுது. கொஞ்சமும் யோசிக்காம கை நீட்டிடுறேன்… சாரிடாம்மா…’ தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவன்,      “வரட்டுமா?” என்றபடி அவள் கன்னம் தட்டிச் சென்றான். அன்பரசனின் செய்கையில் அப்பாவும்,Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #14”

மனமெல்லாம் மனையாளே… அத்தியாயம் #13

காலை வணக்கம் தோழமைகளே… நேற்று உடல்நிலை சரியில்லாததால் பதிவு கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். “அச்சும்மா…!” என அழைக்கும் குரல் கேட்டு படுக்கை அறையிலும், ஹாலிலும், பத்தியிலுமாய் முடங்கி இருந்த மூவரும் வெளியே வர, அங்கே முத்துராமன் கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்தார். “அப்பா…” என ஓடியவள் “போச்சுப்பா… எல்லாம் போச்சு! இந்த ஆள் என்னை ஏமாத்திட்டாரு…!” என பெருங்குரலெடுத்து அழ மகளை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தவர், “நீ எதையும் இழக்கலை அச்சும்மா! இவன் தான் கையில கிடைச்சContinue reading “மனமெல்லாம் மனையாளே… அத்தியாயம் #13”

மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #12

“இப்ப என்ன சொன்னீங்க?” மிரட்டலாய் கேட்க, ‘என்ன இது ஒரு மார்க்கமா இருக்கா?’ என நினைத்தாலும், மிரட்டும் விழிகளிலும், வெண்ணையென குலைந்த வயிற்றிலும், வழவழப்பான இடையிலும், பளீரென்றிருந்த கெண்டை கால்களிலும் மயங்கியவனாய், “வெளில போய் படுத்துக்கறேன்னு சொன்னேன்.” என நெருங்கி வர அவனது பனியனை கொத்தாக பிடித்து தன் முன்னே இழுத்து, “ஏன் இங்க படுத்தா ஆகாதா?” சிருங்காரமாய் உதடு சுழிக்க, “ஆகுமே! பட்டப்பகல் இரவாகும்! பரவாயில்லையா?” புருவத்தை ஏற்றி இறக்கியபடி கேட்க,             “பரவாயில்லை…” என்றவள் நாணிContinue reading “மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #12”

மனமெல்லாம் மனையாளே… அத்தியாயம் #11

முதலிரவு முடிந்து, விடிந்து வெகு நேரமாகியும் மனையாளை எழுப்பாமல் தன் மீது சுமந்தபடி அகமும், முகமும் மலர ஆனந்த சயனத்தில் அன்பரசன் இருக்க… மெல்ல கண் விழித்த அர்ச்சனா, ‘இரவிலிருந்து இப்படியேவா படுத்திருக்கிறேன்?!’ எனும் கேள்வியுடன் வேகமாய் விலகி எழுந்து, “ஏன் மாம்ஸ், நைட்டெல்லாம் இப்படியேவா படுத்திருந்தீங்க? நான் தூங்கினதும் கீழே படுக்க வச்சிருக்க வேண்டியது தானே? என் மொத்த வெயிட்டையும் தாங்கிட்டு இருந்திருக்கீங்க… உடம்பு வலிக்கலையா?” வேதனையுடன் கேட்க, “இல்லடாம்மா…உன்னை சுமக்கிறது சுகமா தான் இருந்துச்சு”Continue reading “மனமெல்லாம் மனையாளே… அத்தியாயம் #11”