மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #7

முற்றத்தில் படுத்து வானத்து நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருந்த அன்பரசனின் மனம் ரணமாய் இருந்தது. தனக்கும் குடும்ப உறவுகளுக்கும் ராசியே இல்லையோ? எனும் கேள்வி எழத் தான் செய்தது. (மனைவி கூடவே இருக்கவங்க இல்லாதவங்களை பார்த்து பொறாமைப்படுறதும், மனைவி இல்லாதவங்க இருக்கவங்களை பார்த்து ஏங்குறதும் வாழ்க்கையில வழக்கம் தான்! இருந்தாலும் பிரச்சனை… இல்லைன்னாலும் பிரச்சனை…) பதிமூன்று வயதில் அன்னையை இழந்து, பதினெட்டு வயது வரை தந்தை, சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை, அப்பத்தா என கூட்டாய் வாழ்ந்தவன் அதன்Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #7”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் # 6

மாந்தளிர் வண்ணப் பட்டுத்தி, தலையில் சரம்சரமாய் மல்லிகை சூடி, தாலி கட்டிய கையோடு மாமன் வாங்கிக் கொடுத்த புத்தம் புது நகைகள் மேனியெங்கும் மினுக்க தேவலோக மங்கை போல் அறைக்குள் வந்தவளின் கால்கள் வேகமெடுக்க, “மாம்ஸ்…” குதூகலமாய் கூக்குரலிட்டபடி ஓடிச் சென்று தன்னவனை பின்னிருந்து அணைக்க, சட்டையை கழட்டியும் கழட்டாமலும் அரைகுறையாய் நின்றவன் பல்லியை போல் முதுகோடு ஒட்டிக் கொண்டிருப்பவளை முன்னே இழுத்து நிறுத்தி, “உன்னை மாதிரி எந்த பொண்ணும் இவ்வளவு ஆரவாரமா முதலிரவு அறைக்கு வந்திருக்கமாட்டா…”Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் # 6”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #5

இரவு உணவுக்காக ரெஸ்டாரண்ட் சென்றவர்கள் அவரவருக்கு பிடித்தமானதை ஆர்டர் செய்ய அகில் பூரி கேட்டான். மனைவி, பிள்ளையென குடும்பமாய் சாப்பிடுவது அன்பரசனிடம் பேரின்பத்தை உண்டாக்க, அர்ச்சனாவோ தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் கணவனை எதிர்கொள்ள முடியாமல் ஒரு வித அவஸ்தையை அனுபவித்தாள். சூடான பூரிகள் வந்துவிட, “கொடு… நான் பிய்த்து தருகிறேன்…” என மகனின் தட்டை தன்னருகே இழுக்க, “விடு அர்ச்சனா… அவனே பார்த்துப்பான்… இன்னும் அவனை சின்னைப்பிள்ளை மாதிரி ட்ரீட் பண்ணாத! நீ சாப்பிடு அகில்” எனContinue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #5”

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #4

அங்கிளா? என் போட்டோவை கூட காட்டவில்லையா? இவளை வருத்தக் கூடாது என நினைத்து தந்தை எனும் உறவையே இவனுக்கு அறிமுகப்படுத்தாமல் இருந்து தவறு செய்துவிட்டேனோ? இத்தனை வருடமாய் என் பிள்ளை என்னைப் பற்றி கேட்கவில்லையா… இல்லை கேட்பதற்கான சந்தர்ப்பமே உருவாகாமல் பார்த்துக் கொண்டார்களா? பள்ளிக்கு போன பிறகுமா அப்பா எங்கே என கேட்கவில்லை? என்னை பார்க்க வேண்டுமென்று சொல்லவில்லை…           பெற்ற பிள்ளைக்கே என்னை யாரென்று தெரியவில்லையே… அந்நியனை போல அங்கிள் எனச் சொல்கிறானே நான் தான் அவன்Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #4”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #49

கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்துவிட்டோம் தோழமைகளே… இதுவரை இக்கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல. அந்தி சாயும் நேரம். MM இண்டஸ்ட்ரிசின் ஊழியர்கள் எல்லோரும் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அதன் MD ஆதித்யன் கணினியில் மும்முரமாய் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். பெற்றோரின் முதல் எழுத்துக்களையே நிறுவனத்தின் பெயராக வைத்திருந்தான். கனரக இயந்திரங்கள் முதல் சிறு சிறு இயந்திரங்களுக்கான மோட்டார்கள் தயாரிக்கும் தொழில் இவனுடையது. ஆரம்பித்த 5 வருடங்களில் நல்ல நிலைக்கு வந்திருந்தது. ஊரின்Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #49”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #48

“படுத்தாதீங்க விஜய்! நானே மறந்துட்டேன்! உங்களுக்கு என்ன?” முகம் திருப்பிக் கொண்டவளின் விழிகளில் நீர் திரண்டு விட்டது. “தெரியும்… நீ மறந்து விட்டாய் அதனால் தான் இத்தனை அடம். என்னால் மறக்க முடியாது… இன்னொரு முறை அதை எதிர் கொள்ளவும் முடியாது. பிரபாவோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள வழி இருப்பது போல் ஆதியோடும் செய்ய வழி வேண்டும். அவ்வளவு தானே…? பேசாமல் ஆதியை இன்னொரு பெண் பெற்றுக் கொள்ளச் சொல். இருவரையும் நம் அமரேந்திரனுக்கே மணம் முடிக்கலாம்…!”Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #48”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 47

“தங்கம்…” மெல்லிய முனகலுடன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்… தோள்களிலும் அதைத் தாண்டியும் முகம் உரசி நீர் திவலைகளை துடைத்துக் கொண்டிருக்க, தன் பெண்மையை உணரத் தொடங்கியவள், “ஆதி அத்தான்… ஐ… லவ்… யூ” உணர்ச்சிகளின் பிடிக்குள் சிக்கி இருந்தவள் மெல்ல மெல்ல தன் இதயம் திறந்துவிட்டாள். அடுத்த கணம் அந்த இதழ்கள் அவன் வசமாக்கிப் போயின… தன் காதல் தேவதை தயக்கமின்றி மனம் திறந்த அந்த நொடி சிறகில்லாமல் பறப்பது போல் உணர்ந்தவன் தன்னிலை மறந்தான்.Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 47”

புத்தக வெளியிடு…

காலை வணக்கம் தோழமைகளே… இங்கு நீங்கள் விரும்பிப் படித்த “என்னருகே நீயிருந்தால்” கதை இப்பொழுது பிரியா நிலையம் வாயிலாக புத்தகமாக வந்துள்ளது. பிரியா நிலையம் அச்சிடும் எங்களது மூன்றாவது புத்தகமிது. எங்களது கதைகளை புத்தகமாக்கும் பிரியா நிலையத்தாருக்கு நன்றிகள் பல. எங்களது கதைகளை படிப்பதன் வழி அன்பையும், ஆதரவையும் நல்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நன்றிகள் தோழமைகளே. புத்தகம் வாங்க: பிரியா நிலையம் : +919444462284 We can shopping : 9940448599

மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #3

“பிள்ளையாரப்பா! மாம்ஸ் எதோ பிளான் போடுறாங்க… அதான் பளிச்சுன்னு முடிவை சொல்லாம என் மனசை மாத்தவும் அவங்களை தயார் பண்ணிக்கவும் வேற எங்கையோ கூட்டிகிட்டு போறாங்க. மாம்ஸ் மட்டும் என்னை கட்டமாட்டேன்னு சொல்லட்டும் அப்புறம் உன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.” (உன் மாமா வேண்டாம்னு சொன்னா அவன் கிட்ட சண்டை போடு அது ஏன் சாமிகிட்ட சண்டை போடுற? மாமா மேல அவ்வளவு லவ்வு?!) மாமனிடம் இருந்த கோபத்தில் கொஞ்சத்தை கடவுளிடமும் காட்டிவிட்டு பைக்கில்Continue reading “மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #3”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #46

காலையில் மகன் அறையில் இருந்தது மருமகள் வருவதைக் கண்ட மங்களத்திற்கு பெரும் மகிழ்வு. “நிவிம்மா குளிச்சுட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க. ஆதியையும் எழுப்பு.” “நான் கிளம்பிட்டு எழுப்பட்டுமா அத்தை?” “சரி டா! அந்த லோட்டஸ் பிங்க் புடவையை கட்டிக்கோ.” “ம்…” கொட்டியபடி சென்றுவிட்டாள். நிவேதா தயாராகி வர, பிரபா வந்திருந்தான். அவனை வரவேற்று அத்தானின் அறைக்கு சென்றவள், “ஆதி அத்தான்! எழுந்திரீங்க…” மென்மையாய் அவன் தோள் தொட்டு அசைக்க… “கதவை சாத்திட்டு வந்து எழுப்பு!” முணுமுணுப்புடன் தலையணையைContinue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #46”