உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #42

“இதில் உன் முடிவு தான் என்ன? உன் ஆதி அத்தான் யோசிக்க இன்னும் எத்தனை நாள் எடுத்துக்கொள்வான்?”

“தெரியாது! நானா அவங்ககிட்ட கேட்க மாட்டேன். எனக்கு நல்லதென்றால் கேட்காமலேயே செய்வாங்க! நீங்க நல்லவர். உங்களோடான வாழ்வு நன்றாகவே இருக்கும். ஆனால் என் ஆதி அத்தான் சம்மத்தித்தால் தான். இல்லைன்னா நீங்க எனக்கு வேண்டாம் சிவா!” எனத் தெளிவாக பேசியவளையே வெறித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவளோடு பேசுவதில்லை.

இரண்டு வாரங்களுக்கு பிறகு ஆதி ஊருக்கு வந்து சேர்ந்தான்.

“நாளை காலை சிவாவை வரச் சொல். காலையில் சாப்பிடுற மாதிரி வரச் சொல்!” என சொல்லிவிட்டு அன்று அவனே கல்லூரியில் கொண்டு போய்விட்டான். எதிரில் வந்த சிவாவை கண்டு கொள்ளாதவன் போல் சென்றும் விட்டான்.

அன்று தானாகவே, ஆதி சொன்னதாக அனைத்தையும் சிவாவிடம் சொன்னாள். எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுமாறு அறிவுறுத்தி சென்றாள்.

“ஏன் லேட்டாக வந்தா உன் அத்தான்… ஓகே சொல்லமாட்டானா?” என காற்றோடு தான் பேசிக் கொண்டிருந்தான்.

மகனுக்கே ஈடுபாடில்லாத போது, தான் என்ன சொல்வது? என மங்களமும் அமைதி காத்தார். அன்று எப்பொழுதும் போல் இரவு அவள் அறைக்கு வந்தான்.

“உன் சிவா என்னடி சொல்றார்?” என்றான் அவளருகே படுத்தபடி,

https://drive.google.com/file/d/1pYuNxPF5jqGJZ9cLWUQQCMJltmW_puYn/view?usp=sharing

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s