
‘கணவனோடு கோவிலுக்கா? என்ன சொல்வானோ தெரியவில்லையே…’ எனும் உதறல் எடுக்க,
“பேசி பார்க்கிறேன் அத்தை…” என எச்சில் கூட்டி விழுங்கியபடி அவனுக்கான க்ரீன் டீயை கலந்து கொண்டு மேலே செல்ல, மனுபரதன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை வழிய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான்.
“குட் மார்னிங், மனு சார்… டீ” என டிரேயை அவன் முன் நீட்ட தன் பார்வையை உயர்த்தாமலே,
“குட்மார்னிங்” என கோப்பையை எடுத்துக் கொண்டான்.
‘அலுவலகத்திற்கு லீவ் போட வேண்டுமென்றால் பல நாட்களுக்கு முன்னமே சொல்ல வேண்டும் என்பவனிடம் எப்படி இன்று விடுமுறை வேண்டுமென கேட்பது’ எனும் கேள்வியை விழிகளில் ஏந்தியபடி ஒருவித படபடப்புடன் நிற்க, நாளிதழில் இருந்து மெல்ல தன் பார்வையை உயர்த்தியவன்,
“ஏதாவது பேசனுமா?” என புருவங்களை ஏற்றி இறக்க…
https://drive.google.com/file/d/1hMYQKmJUHFONTYckrClwIxNTC3GHFSN2/view?usp=sharing
Nice epi
LikeLike