
“அதிகபட்சம் ஒரு வருஷம் தான், அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்” என்று தம்பியை சமாதானப்படுத்தும் பொருட்டு, மதுரா வார்த்தைகளை விட்டுவிட ப்ரியவும், ரிஷியும் அதிர்ந்து நோக்க,
“ப்ரெக்னன்ட் ஆனா அம்மா வீட்டுக்கு வர்ற முறை இருக்கே… அதை சொல்றா… நீங்க என்ன நினைச்சு இப்படி ஷாக் ஆனீங்க?” என்று மனுபரதன் விசாரிக்க,
“ஹி… ஹி… நீங்க கரெக்ட்டா தான் போறீங்க. நாங்க தான் தப்பா நினைச்சுட்டோம்…” என்று இருவரும் அசடு வழிந்து சமாதானமாயினர்.
மதுராவை கண்ணாடியில் நோக்கியவன் தீப்பார்வை பார்க்க, அதே நேரம் ப்ரியா கண்ணாடியை பார்க்கவும், அவன் கண் சிமிட்டவும் சரியாய் இருக்க,
“ரிஷி, மாமா காரை நிறுத்தினதும் நீ இங்க வந்துடுடா… இவங்க கண்ணால பேசுறதை பார்த்தா என் கண்ணு கதறுது!” என்றாள்.
“ஷ்… சும்மா இரு!” என்று மெல்லிய குரலில் மது அவளை அதட்ட,
“மாமா, அக்கா உங்களை சொல்ல முடியாம என்னை சொல்றா…!” எனவும் அவள் காலை மதுரா செல்லமாய் மிதிக்க,
https://drive.google.com/file/d/1Gbb5KWNIjLwx7wvmfeZDTVbxDT4VwNNf/view?usp=sharing