அன்புள்ள மாயவனே…!!!

காலை வணக்கம் தோழமைகளே…

இனிய செய்தியுடன் வந்திருக்கிறோம். காதலர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டிற்கு சிறப்புப் பரிசாய் டீசர்கள் கொடுத்தோமே “அன்புள்ள மாயவனே…!!!” எனும் கதை, அது இப்பொழுது அமேசான் கிண்டலில் படிக்கக் கிடைக்கும். விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

இக்கதை காதல், பிரிவு, மீண்டும் காதல் என பின்னப்பட்டிருக்கும் ஒன்று. கதைக்களம் மதுரைக்கு அருகில் இருக்கும் தேனூர் மற்றும் நவநாகரிக நகரமான புதுடில்லி.

மெக்கானிக் செட் வைத்திருக்கும் மாயழகன் தான் கதையின் நாயகன். அண்ணனின் திருமணத்திற்காக சொந்த கிராமத்துக்கு வரும் மதுநிலா அருந்தவாளு குறும்புத் தேளு! ஆனாலும் அவள் தான் அவன் ஏஞ்சலு! மாயழகன் அதிக முதிர்ச்சி உடையவன். தனது குடும்பத்தின் மீதும் இந்த குறும்புக்காரியின் மீதும் அளவிட முடியா அன்பு கொண்டவன்.

இவனது அன்பு செய்யும் குணம், மற்றவரிடம் பழகும் பாங்கு, நேர்த்தி மற்றும் நரிவிசு அனைத்தும் நாயகியை கவர மற்ற பெண்களுக்கு முன் தானே அவனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும் என எண்ணுபவளுக்கு அவன் வெறும் டிப்ளமோ மட்டுமே படித்திருக்கிறான், மெக்கானிக் செட் தான் வைத்திருக்கிறான் என்பதெல்லாம் தெரியாது. அவனுக்கும் இவள் பள்ளியில் படிக்கும் பருவ சிட்டு என்பதும் தெரியாது.

இந்நிலையில் இருவரிடமும் காதல் மலர அதை பகிரும் முன்னமே ஒருவரை பற்றிய உண்மை ஒருவருக்கு தெரிய அங்கே பிரிவு உண்டாகிறது.

பிரிவின் வலியை அவர்கள் எப்படி கடந்து வந்தார்கள்? மாயன் தன்னவளை அடைய தனது தகுதியையும், தரத்தையும் எப்படி உயர்த்திக் கொண்டான்? மதுநிலா எந்தவிதமான சிக்கலில் சிக்கிக் கொண்டாள்? மீண்டும் இருவரும் இணைந்தார்களா? அதன் பிறகாவது அவர்களது வாழ்வு மலர்ந்ததா? மாயழகன் மனையாளை பிரச்சனையில் இருந்து எப்படி மீட்டெடுத்தான் என்பதை எல்லாம் கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் தகவலாய் தற்போது சமூகத்தில் நிலவும் போதை பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வும் விரவியிருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்! நற்பவி! நற்பவி! நற்பவி!

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s