
சூரியன் முகத்தில் தன் கதிர்களை பரப்புவதை உணர்ந்து, மெல்ல சோம்பல் முறித்து எழுந்தவள், ஆபீஸிற்கு கிளம்பிக்கொண்டிருக்கும் கணவனைக் கண்டாள்.
எப்போதும் சிரித்த முகமாய் தனக்கு குட்மார்னிங் சொல்பவனுக்கு இன்று என்னவாகிவிட்டது? என்ற சிந்தனையுடன், அவன் முகம் பார்க்க, நெற்றியில் பளிச்சென தெரிந்த வெட்டுக் காயமும் அதனால் உண்டான சிறு வீக்கமும், இரவு நடந்தவற்றை அரைகுறையாய் அவளுக்கு உணர்த்தின.
தவறு செய்த குழந்தை, தாயிடம் தயங்கித் தயங்கி மன்னிப்பு கேட்குமே… அவளது மன்னிப்புக்காக மருகுமே, அதே பரிதவிப்புடன் கண்ணாடி முன்நின்று ‘டை’யை கட்டிக் கொண்டிருந்தவன் அருகே வந்து,
“ஐயம் சாரி, பிரபா!” எனவும், மெல்ல அவள் முகம் பார்த்து,
“இரவு என்ன நடந்துச்சுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? உன் கொடிய வார்த்தைகளால் என்னை கூறு போட்டது நினைவிருக்கா? அதை விட இது பெரிய வேதனையைக் கொடுக்கல.” என்றபடி விலகி சென்றுவிட்டான். எவ்வளவு தான் யோசித்துப் பார்த்தாலும், தான் அவனிடம் என்ன பேசினோம் என்று அவளுக்கு நினைவு வரவில்லை.
அடுத்து என்ன நடந்திருக்கும் என தெரிந்துகொள்ள கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள் தோழமைகளே…
https://drive.google.com/file/d/1URgp63s_JTb4Ai-rg-QRx2Ya6rCNoFaB/view?usp=sharing