வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க எளிய வழிகள்:

வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க எளிய வழிகள்:

நம் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலே நம்மை நேர்மறையாக  இயங்க வைக்கும். மணத்திற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அப்படிப்பட்ட நேர்மறை ஆற்றலை எளிதாக உருவாக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக…

1. வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது:

காலையில் எழுந்ததும் காசு பணம் கேட்காமல், காபி குடிக்காமல் புத்துணர்வு பெறச் செய்யும் ஒரே விஷயம், குளுமை. ஆம்! தோழமைகளே, எத்தனை பேர் இதை உணர்த்திருக்கிறீர்கள்?

சிறிய வாசலை பெருக்கி, நீர் தெளித்து, 5 புள்ளி கோலமோ, ஒரு தாமரை பூவோ போட அதிக பட்சம் ஐந்து நிமிடம் மட்டுமே ஆகும். அந்த 5 நிமிடங்கள் நம் உடல் முழுவதும் சுத்தமான, குளுமையான காற்றை கிரகித்துக்கொள்ளும். மனம் நிர்ச்சலனமாய் இருக்கும். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

பொதுவாக இங்கு (சிங்கப்பூரில்) 7 மணிக்கெல்லாம் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் வேலைக்கும் சென்றுவிடுவார்கள். ஆக காலை மற்றும் மதியத்திற்கான உண வை சமைத்து கட்டி கொடுப்பது என் வழக்கம். ஆதலால் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். இருந்தும் அந்த குட்டி காரிடரில் நீர் தெளித்து கோலமிட நினைத்ததில்லை.

நல்ல நாள், பண்டிகை காலங்களில் மட்டுமே கோலமிடுவது என் வழக்கம். வழக்கம் என்பதை விட சோம்பல்… இல்லை, இல்லை! அப்படி சொல்ல முடியாது. ஒரு விட்டேற்றியான மனநிலை இங்கு  யார் வந்து நம்மை பார்க்கப் போகிறார்கள் என்பது போல். கடந்த ஆறு மாதங்களாய் தினமும் கோலமிடுவதை கடைபிடிக்கிறேன். அதன் விளைவு,

முதல் நாள்: 

“என்னம்மா…! அதிசயமா இருக்கு கோலமெல்லாம் போட்டிருக்க…!?” (மகள்)

(அநியாயத்துக்கு இமேஜை டேமேஜ் பண்றாளே…) 

“அம்மா… இன்னைக்கு என்ன விஷேசம்?” (மகன்) 

(அட கிரகத்த! தினமும் போட்டாத் தானே இது தினப்படி நடைமுறைன்னு தெரியும். பாவம் புள்ள! என்ன விசேஷம்ன்னு கேட்குது.) 

சிறு புன்னகை (இந்த சிரிப்பு யாரோடதுன்னு நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும்.)

(இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் பண்ணிக்கிறது? பாராட்டா? கேலியா? புரியலை தோழமைகளே…)  

மூவருக்குமான எனது பதில், இனி தினமும் போடலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கேன். 

மூன்று நாட்களுக்கு பிறகு…

“சூப்பர் மா! சொன்ன மாதிரியே டெய்லி போடுற.” (மகள்)

“தேங்க்ஸ் பாப்பா.”

“சாரி மா… சைக்கிள் ஓட்டும் போது கோலம் அழிஞ்சிடுச்சு…” (மகன்)  

“பரவாயில்ல தம்பி, கோலம் போடுறது அழிக்கிறதுக்குத் தான்.”

“ஓ! நீ திட்டுவியோன்னு பயந்துட்டேன்.”

“திட்டமாட்டேன். நீ சைக்கிள் ஓட்டு.”

“வீடே வித்தியாசமா மாறிடுச்சு. நல்லா இருக்கு!” மலர்ந்த சிரிப்போடு மாமா சொல்ல, அம்மு ஹாப்பியோ ஹாப்பி!

நோட் திஸ் பாயிண்ட் தோழமைகளே, இது தான் நேர்மறை ஆற்றல்! ஐந்து நிமிஷத்தில் குடும்பமே என்னை அதிசயமா, ஆச்சர்யமா, சந்தோஷமா பார்த்துச்சு.

இப்பவெல்லாம் என் பொண்ணு இந்த கோலம் நல்லா இருக்கு. எனக்கும் சொல்லித் தறியான்னு கேட்க ஆரம்பிச்சுட்டா. இது கூடுதல் மகிழ்வைத் தருது.

சிறு மாற்றம் பெரிய விளைவுகளை கொடுக்கும் போது தாராளமாய் பின்பற்றலாம் இல்லையா தோழமைகளே?        

2. நிலைவாசலிலும், பூஜை அறையிலும் தீபங்கள் ஏற்றுவது:

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை அறையிலும், நிலைவாசலிலும் தீபமேற்றி வழிபடுவேன். மற்ற நாளெல்லாம் பூஜை அறையின் லைட்டை போட்டுவிடுவதோடு சரி.

ஆனால் இப்பொழுது என் அக்கா (யோகா) சொல்லி காலை, மாலை என இரு வேளையும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறேன். நம்மைத் தவிர மற்றவர்கள் வீட்டில் தூங்கும் பொழுது விளக்கேற்றலாமா? எனும் சந்தேகம் வருமேயானால் அதற்கான விடை, தாராளமாய் ஏற்றலாம்.

குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? அடுத்த கேள்வி வருகிறதில்லையா? கணவன், மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். மற்ற நாட்களில் கை, கால், முகம் மட்டும் சுத்தம் செய்து கொண்டு விளக்கேற்றலாம்.

வழக்கமாய் பள்ளிக்கு செல்லும் பொழுது பிள்ளைகளை சாமி கும்பிட்டுட்டு போங்க என்று சொல்வது வழக்கம். இப்பொழுதெல்லாம் அவர்களே தானாக வழிபட துவங்கிவிட்டார்கள்.

விளக்கு ஏற்றினாலும் இல்லாவிட்டாலும் வேலைக்கு என்றில்லை, எங்கு வெளியே செல்வதென்றாலும் சாமி கும்பிட்டுவிட்டு செல்வது தான் என் கணவரின் வழக்கம்.

இப்பொழுது வேலைக்கு செல்லும் பொழுது விளக்கு எரிவதால் ஸ்பெஷலா பாராட்டுதலான வார்த்தைகள், மெச்சுதலான பார்வை, பரிசுகள் எல்லாம் கிடைக்கிறது. இது தான் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதன் அறிகுறி.     

 • வாசனை தரும் ஊதுபத்திகள், சாம்பிராணி, தசாங்கம், பச்சை கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்துவது:

காலையில் நமக்குத் பிறகு எழுந்து வரும் நமது குடும்பத்தார் வீட்டை சூழ்ந்திருக்கும் ஊதுபத்தியின் சுகந்தமான மணத்தை சுவாசிப்பார்கள். அச்சுகந்தம் அவர்களிடமும் ஓர் மகிழ்வை, புத்துணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. இதுவும் அனுபவ பூரவமாய் உணர்ந்தது! முயற்சித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வீர்கள்.

இப்பொழுது வாசனை தரும் மெழுகுவர்த்திகள், போட்போரி எனப்படும் உலர்ந்த பூக்கள் போன்றவையும் கிடைக்கின்றன. அவற்றைக் கூட பயன்படுத்தலாம். 

 • வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை நன்கு திறந்து வைத்து சூரிய ஒளி மற்றும் காற்றை வீட்டிற்குள் உலா வரச் செய்வது:

நம் வீட்டில் பஞ்ச பூதங்களும் சரியாய் இருந்தால் நேர்மறை ஆற்றல் தானாகவே அதிகரிக்கும். சூரிய ஓளியும், நல்ல காற்றும் நேர்மறை ஆற்றலை இயற்கையாக வாரி வழங்கும் விஷயங்கள். நம்மில் பலர் வீடு நல்ல காற்றோட்டமா, வெளிச்சமா இருக்கனும்ன்னு சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் பாசிட்டிவிட்டியை அதிகப்படுத்துவது தான்.     

 • நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது பூ உருளி, செயற்கை நீர் ஊற்று போன்றவற்றை பயன்படுத்துவது:

அந்த நீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி தூவினால் அவ்விடமே மனமாய் இருக்கும். செய்துபாருங்கள். என் வீட்டு பவுண்டனில் நான் பச்சை கற்பூரம் தூவுகிறேன். அதன் நறுமணத்தை தினமும் நுகர்கிறேன் எனும் முறையில் சொல்கிறேன்.

நம்மை சுற்றி நறுமணம் நிறைந்திருந்தால் இயற்கையாகவே மனம் அமைதிகொள்ளும். நம்மில் பேராற்றல் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை தோழமைகளே!     

 • விண்ட் சைம் எனப்படும் காற்றில் ஆடும் குழல்களை தொங்கவிடுவது.

விண்ட் சைமில் உருவாகும் மென்மையான இசை, எதிர்மறை ஆற்றலை அழிக்கக் கூடியது. இது மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பு. இயற்கையாகவே மூங்கிலுக்கு நேர்மறை அதிர்வலைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு.

நமது முன்னோர்கள் தினசரி வழிபாட்டில் மணியை பயன்படுத்தியதற்கான காரணமும் இது தான். மணி ஓசைக்கும் எதிர்மறை ஆற்றலை அழிக்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு. 

 • துளசி செடி, மணி பிளான்ட், வீட்டிற்குள் வளர்க்கும் மூங்கில் செடி, கற்றாழை போன்றவற்றை வளர்ப்பது:

இவையெல்லாம் காற்றை சுத்தப்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. எதிர்மறை ஆற்றலை தன்னுள் கிரகித்துக் கொண்டு நேர்மறை ஆற்றலை பரப்பும் சக்தி கொண்டவை என்பது நம் முன்னோர்கள் கூற்று. 

அதிகமான கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்கள், ஆகியவற்றை இச்செடிகள் கிரகித்துக்கொள்ளும். அதன் விளைவாய் அவை மடிந்தும் போகும். இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீகள்?

என் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் சில வரும்பொழுது செழிப்பாக இருந்த எனது துளசி செடி சட்டென செத்துப் போனதை நான் கண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒன்றை வளர்க்க ஆரம்பித்தால் நேர்மறை ஆற்றல் நிறையத் துவங்கும்.         

 • பறவைகள், நாய், பூனை, பசு, ஆடு, மாடு, எறும்பு போன்றவற்றிற்கு உணவும், நீரும் வைப்பது:

இவையெல்லாம் புண்ணிய செயல்கள். இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்னும் கிராமங்களில் ஆடுமாடுகளை வளர்ப்பவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு, நமக்கு ஏதாவது ஆபத்து வருமெனில் அவை முதலில் இவற்றைத் தான் பாதிக்கும் என்று சொல்வர்.

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளோ, செடிகளோ நமக்காக, நமது எதிர்மறை ஆற்றலை தனதாக்கிக் கொண்டு நம்மை காக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையும் கூட.  

ஆதலால் அவற்றை வளர்க்க முடியாவிட்டாலும் நம்மால் முடியும் பொழுது உணவும் தினப்படி வாசலில் கொஞ்சம் நீரும் வைத்தால் அவை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளும். அப்பொழுது நேர்மறை ஆற்றல் உருவாகும்.

நாங்கள் இருக்கும் இடத்தில் இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள் இருந்தால் கொஞ்சமே கொஞ்சம் சர்க்கரையை தூவிவிடுங்கள் நிச்சயம் எறும்புகள் வந்து அவற்றை எடுத்துக்கொள்ளும்.       

அடுத்த பதிவில் இன்னும் சில உபயோகமான தகவல்களுடன் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்!! 

4 Comments

 1. Anonymous says:

  It’s interesting. Happy home .

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thank u so much

   Like

 2. Anonymous says:

  Ammu Yoga!!!Nenga vera level….Live long life happily…

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

Leave a Reply to akmlakshmi Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s