உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 29

‘நிர்வாணா’ பாரில் பவானியும், அச்சுவும் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்க… அர்ஜுன் இறுகியிருந்தான். பவானி குழப்பத்தில் இருந்தாள்.

“பார் பேபி, நானும், நீயும் நண்பர்கள் தான். என்னால் உன்னை கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது. நான் உன்ன விரும்பல. நட்போட தான் பழகினேன்… புரிஞ்சுக்க.”

“பொய் சொல்லாத அச்சு. உன் பேரண்ட்ஸை நினைச்சு பயப்படுறியா? என் அப்பாவை பேசச் சொல்றேன். அது ஒரு பிரச்சனையே இல்ல…”

“பவானி நான் உன்ன விரும்பினால் யாரை வேணாலும் எதிர்த்து திருமணம் பண்ணிக்குவேன். பட் இங்கு பிரச்சனையே நாம நட்பாக பழகியதை நீ தப்பா புருஞ்சுகிட்டு இருக்கங்கிறது தான்.

நான் எப்பவாவது உன்னை காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேனா? இந்த பாரையும், பப்பையும் தவிர வேறு எங்காவது சந்திச்சிருக்கோமா?”

“போதும் அர்ஜுன்… உன் விளையாட்டை நிறுத்து. என்னை டென்ஷன் பண்ணாத. இதை பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம்…”

‘இவனுக்கு என்ன தான் பிரச்சனை? எனக்காக உருகியது, பார்த்து பார்த்து தாங்கினது இதெல்லாம் காதல் இல்லையா?’

கோபத்தில் கத்திவிடப் போகிறோம் எனப் பயந்தே பேச்சை ஒத்திவைக்க விரும்பினாள். ஆனால்அவனோ இதை இன்றோடு முடித்துவிட வேண்டும் என நினைத்து,

“நோ பவானி, இன்னொரு நாள் பேசுவதற்கெல்லாம் இதில் ஒண்ணுமே இல்லை. இன்னும் எத்தனை நாள் கழித்து பேசினாலும் என் முடிவு இது தான்!

இனி நாம சந்திக்கவே வேண்டாம். உன்னை ஃபிரண்டா கூட பார்க்க முடியாது. அதற்கான தகுதியை நீ இழந்துட்ட. புரியுதா? இனி எனக்கு போன் பண்ணாத… நமக்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு…”

“அர்ஜுன்!” அலறியவள் அவனை அறைய கையை ஓங்க, அதை தடுத்து அவள் கரம் பற்றியவன்,

“உன்னை போல் ஒரு ராங்கியை என்னால் மனைவியாக ஏற்க முடியாது. இன்றோடு எல்லாம் முடிந்தது குட் பை!” போய்விட்டான்.

நடந்த எதையும் அவளால் நம்ப முடியவில்லை. பிரபாவிடம் பேசிய பிறகு இரண்டு மூன்று முறை அர்ஜுனிடம் திருமண பேச்சை எடுக்க… அவன் தட்டிக் கழித்தான். அது நன்கு புரியவே அவன் மனதில் இருப்பதை தெளிவாக தெரிந்து கொண்டுவிடும் பொருட்டு விடாப்பிடியாய் பேசப் போய் இப்படி ஆகிவிட்டது.

இன்னும் கூட தங்களுக்குள் பிரிவு நேர்ந்துவிட்டது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. குடிக்க வேண்டும்… அதைவிட முக்கியமாய் யாரிடமாவது மனதில் உள்ளவற்றை கொட்ட வேண்டும்.

இதற்கெல்லாம் முன் முக்கிய சந்தேகம் ஒன்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் வேகமாக பிரபாவுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டான்.

“சொல்லுங்க மேம்…” அமைதியாக காத்திருக்க,

“பிரபா, லவ் பண்றவங்க பேபின்னு கூப்பிடுவாங்க தானே?”

‘கடவுளே, அந்த நரியின் சாயம் வெளுத்துவிட்டது போலவே… இப்போ இவ எங்கிருக்கான்னு தெரியலையே?’ என்னும் தவிப்புடன்,

“நீங்க எங்கிருக்கிங்க மேம்?”

“நிர்வாணால தான். கேட்டதுக்கு பதில் சொல் பிரபா… உனக்குத் தெரியுமா, தெரியாதா?’ கோபமாகவே கத்த,

“எனக்கு தெரிந்த யாரும் இப்படி கூப்பிட்டதில்ல மேம். வேற செல்ல பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன், இது தெரியல..”

“நீ உன் கேர்ள் ஃபிரண்டை எப்படி கூப்பிடுவ?”

“பவானி! எனக்கு கேர்ள் ஃபிரண்டெல்லாம் கிடையாது. அப்படி இருந்தாலும் என் பொண்ண தவிர நான் யாரையும் பேபின்னு கூப்பிடமாட்டேன்.” அவனும் நிர்வாணாவை நோக்கி ஆட்டோவில் வந்துகொண்டிருந்தான்.

“அப்போ நீ சுத்த வேஸ்ட்! உனக்கு காதலை பத்தி ஒண்ணுமே தெரியாது. “

அதற்குள் முதல் ரவுண்டை முடித்து விட்டிருந்தாள் பவானி. போதை லேசாக ஏறத் தொடங்க,

“பிரபா நீ சொன்னது சரிதான். இந்த அச்சு என்ன லவ் பண்ணலன்னு சொல்லிட்டான். ஃபிரண்டா தான் பழகினானாம்… அவன் பொய் சொல்றான் தானே? நான் ஃபீல் பண்ணேன் பிரபா…

உள்ளுணர்வு பொய் சொல்லாது. நான் அவனை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? ஏன் நோ சொன்னான்?” அவள் புலம்பிக் கொண்டிருக்க நேரில் வந்து நிற்கும் பிரபாவைக் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஏய் பிரபா…. வா, வா..!” ஏதோ விருந்துக்கு வந்தது போல் பலமாக வரவேற்று,

“உன்னோட ஃபேவரைட் என்ன?” ஆர்வமாய் அவன் முகம் பார்க்க,

“சாரி மேம் எனக்கு பழக்கமில்லை.”

“பின்ன எதுக்கு வந்த?” கேலி சிரிப்புடன் வினவியவளை பார்க்க பாவமாக இருந்த போதும்,

“உங்களுக்காகத் தான் மேம்.. கிளம்புங்க வீட்டில் கொண்டுபோய் விடுறேன்.”

“ஏய்! நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.”

அடுத்த ட்ரிங்க் ஆர்டர் செய்தவள் இவனுக்கு கோக் ஆர்டர் பண்ணியதோடு நில்லாமல் தன் புலம்பலை தொடங்கிவிட்டாள்.

“பிரபா, நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா?”

“இல்ல மேம்…”

“இந்த மேமெல்லாம் வேண்டாம் கால் மீ பவானி… இப்போ நாம ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம் சரியா? கிவ் மீ எ ஹாய் பைவ்….” விரிந்த புன்னகையுடன் அவன் கரத்தோடு தன் கரம் தட்டியவள்,

“சொல் பிரபா, உன்னை எந்தப் பொண்ணாவது இப்படி கழட்டிவிட்டிருக்கா?”

“இல்ல பவானி… போதும் கிளம்பலாம்.”

“ஷட் அப்! உன்னை யாரும் ஏமாத்தல, அதான் என் வலி உனக்கு புரியல…!”

‘எடுத்து சொன்னப்போ புரிஞ்சுக்காம இப்போ வேதனைபடுறியேடி!’ அவள் வருத்தமும், வேதனையும், ஏமாற்றமும் அவனை பாதித்தது.

ஏதேனும் செய்து அவள் துயர் துடைத்துவிட வேண்டும் என்ற மனதின் வேகம் கண்டு அவனுக்கே ஆச்சரியம். கூடவே ஆதியின் காதல் இலக்கணமும் நியாபகம் வர, தான் அவளை விரும்புகிறோம் எனத் தெரிந்து போனது.

ஆனால் அந்த காதல் நிரைவேறுவதற்கு ஒரு சதவீத வாய்ப்புக்கு கூட இல்லை எனும் போது கோபமும் ஏமாற்றமும் போட்டி போட, அதை மறைத்து வாய் வஞ்சனையில்லாமல் பொய் சொன்னது.

“நான் யாரிடமும் இப்படி ஏமாறலன்னும் சொல்லலாம்…”

“ஏதோ ஒண்ணு… நான் ஏமாந்துட்டேன்ல?! எப்படி ஏமாந்தேன்? அதான் புரியமாட்டேங்குது. அச்சு எவ்வளவு கேரிங் தெரியுமா?”

‘ஆமா, அவன் கேரிங்கில் கொல்லியை வைக்க’ கடுப்பாகிய போதும்,

“சரி, இப்போ என்ன செய்யலாம் பவானி?” என்றான் அமைதியாக.

“ஹாங்… இது! ஹலோ அங்கிள்…” தடுமாறியபடியே அடுத்த மேசைக்குச் சென்றவள் அங்கிருந்த இரண்டு பெரிய மனிதர்களிடம்,

“பாருங்க அங்கிள்… ஒருத்தன் என்னை லவ் பண்ணிட்டு இப்போ இல்லைங்கிறான் அவனை என்ன பண்ணலாம்?” அவர்கள் மேசையில் போய் உட்கார்ந்துவிட்டாள்.

‘கடவுளே! பேசாமல் வாயை வச்சுக்கிட்டு இருந்திருக்கலாம் நான் என்னவோ நினைச்சு கேட்கப் போய் இவ ஆரம்பிச்சுட்டாளே” செய்வதறியாமல் அவளருகே போக,

“இவனா? பாப்பா அம்சமா இருக்கு தம்பி… ஏன் வேணான்னு சொல்ற?” இவனை நோக்கி கேள்வி பாய…

“ஐயோ இல்ல அங்கிள், இவன் என் ஃபிரண்ட்.” அவனைத் தோளோடு அணைத்துக் கொள்ள, அவள் ஸ்பரிசம் மூச்சடைக்க வைத்தது. மெல்ல அவள் கரத்தை விலக்கியவன்,

“போகலாம் பவானி…” என கரம் பற்ற

“வெயிட், ஒன் மோர் கொஸ்டின்…. அங்கிள் அவன் என்ன ஃபிரண்டுன்னு சொல்லிட்டான் இப்போ நான் என்ன பண்ண…?”

“ஹா ஹா ஹா… நீங்க எல்லாம் அண்ணன்னு சொல்லி கழட்டிவிடுவிங்க. பசங்க ஃபிரண்டுன்னு சொல்லுவானுகளா?” அங்கிள்கள் இருவரும் போதையில் உளறியபடி சிரிக்க, அவளை இழுத்துக் கொண்டு சென்றவன்,

“சாவியைக் கொடு பவானி…” தடுமாறிக் கொண்டிருந்தவள், அவன் தோள் சாய்ந்து நின்று, தன் ஜீன்ஸில் கையை விட்டு துழாவ சாவி தான் அகப்பட மாட்டேன் என்றது.

“காணுமே..” சிறுபிள்ளை போல இரு கையையும் விரித்து உதடு பிதுக்க, அவளை அங்கேயே நிறுத்திவிட்டு உள்ளே சென்று பார்க்க அவளது கிளட்ச் மேசையில் இருந்தது.

அதில் சாவியும் இருக்க, விரைந்து வெளியே வர ரோட்டில் நின்று லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தாள் பவானி. கோபமும் அலுப்புமாய் அவளை மீண்டும் இழுத்து வந்து காருக்குள் தள்ளி வண்டியைக் கிளப்பினான். (முடியல…)  

வழி நெடுகிலும் இதே புலம்பல்…

“பிரபா, என்னை பாரேன்… இந்த முகத்தை பார்த்தால் ஏமாறுவது போலவா இருக்கு…” வண்டி ஓட்டவிடாமல் அவன் கரத்தை பிடித்து இழுப்பதும், முகத்தை தன் புறம் திருப்பவும் முயற்சித்துக் கொண்டிருக்க,

“இப்படி பண்ணினா எங்கயாவது போய் மோத வேண்டியது தான்… கொஞ்சநேரம் பேசாமல் வா பவானி…”!

“நோ, எனக்கு பதில் சொல்லு…”

“ஷ்… பேசாத! வாயை மூடு! அமைதியா உட்காரல… பிடிச்சு வெளியே தள்ளிவிட்டுருவேன்.” கோபம் போலும் மிரட்ட, அது நன்றாகவே வேலை செய்தது.

காலை தூக்கி டாஷ்போர்டு மேல் வைத்து கொண்டு அமர, தலையில் அடித்துக் கொண்டவன்,

“ஒழுங்கா உட்கார்!’ என அவள் காலை தட்டிவிட…

“என்ன மிரட்டுற? நான்… நான் உனக்கு என்ன வேணும்?” குழப்பமாய் அவன் முகம் பார்க்க பதில் சொல்ல விரும்பாதவனாய் அமைதி காக்க சற்று நேரம் யோசித்தவள்,

“ஏய்! நான் உன் பாஸ்…” (இதுலயெல்லாம் தெளிவா இரு)

“கொஞ்ச நேரம் அமைதியா இரு பவானி.”

“யூ இடியட்! கால் மி மேம்…”

‘குடிகாரி… குடிகாரி…!’ ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

நல்ல காலம் ஒருவழியாக அவள் வீடு வந்துவிட்டது. இரவு நேரம் என்பதால் முருகன் வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தார்.

கீழே இறங்கியவள்,

“கொடு!” வெடுக்கென அவனிடம் இருந்து சாவியை பறித்துக்கொண்டு தடுமாறியபடி உள்ளே செல்ல,

‘இந்த படிகளில் உருண்டு விழாமல் போய்விடுவாளா?’

திரும்பி செல்ல மனம் இல்லாமல் அவள் வீட்டிற்குள் நுழையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

இதில் இருந்து எப்படி மீண்டு வரப் போகிறாள் என்னும் பெரும் கவலை வந்து ஒட்டிக்கொண்டது பிரபாவுக்கு.

‘நாம் ஏன் இவளுக்காக கவலைப்படவேண்டும்?’

மனதின் கேள்விக்கு விடை இல்லாத போதும் அவள் நினைவு நீங்கா இம்சையாய் குடிகொண்டது அவனிடம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அவள் நினைவாகவே இருக்க, இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டவனின் அழைப்புகள் எடுக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

குறுஞ்செய்திகளுக்கும் பதிலே இல்லாது போக, இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்னும் முடிவுக்கு வந்தவன் புதிதாக பெரிய கம்பெனியின் டெண்டர் ஒன்றுக்கு கொட்டேஷன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்க,

அந்நேரம் புயலாய் எந்த அறிவிப்புமின்றி அவனது அறைக்குள் நுழைந்தவள்,

“பிரபா! VJRக்கு  கொட்டேஷன் ரெடி பண்ணிட்டியா?”

“எஸ் மேம், அதை தான் பிரிப்பர் பண்ணிட்டு இருக்கேன்”

“நாம கொட்டேஷன் அனுப்ப வேண்டாம்.”

“ஏன்? ” ஒற்றையாய் வந்து விழுந்த வார்தையில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.

“நான் சொல்றதை மட்டும் செய், போதும். நீ என்னிடம் கைகட்டி வேலை பார்ப்பவன். கேள்வி கேட்கும் வேலையெல்லாம் வச்சுக்காத…”

“சாரி மேம், என்னை உங்க அப்பா கொஸ்டின் பண்ணுவாங்க. சரியான காரணம் இல்லாம பெரிய ஆஃபரை விட முடியாது.”

“உனக்கு எல்லாத்தையும் சொல்லணும்ல? அச்சு அந்த டெண்டரை எடுக்கணும், அப்போ தான் எங்க கல்யாணம் நடக்கும்.

இதைக் காட்டித் தான் அவனும் தொழிலில் வெற்றி பெறுவான் என்னும் நம்பிக்கையை அவன் தந்தைக்கு கொடுக்கனும். அதன் பிறகு தான் எங்க கல்யாணத்தைப் பற்றி பேசனும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். விளக்கம் போதுமா?”

“பவானி, உங்களுக்கு புரியலையா? நம்மை ஜெயிக்கவிடாம பண்றதுக்கு இதெல்லாம் ஒரு காரணம்.  மத்தபடி அவன் உங்களை கல்யாணமெல்லாம் பண்ணிக்கமாட்டான். மறுபடி இதையும் கோட்டை விட்டுடாதீங்க.

இது ரொம்ப பெரிய ஆர்டர். இது மட்டும் கிடைச்சா இதுவரை இழந்த ரெண்டு பிராஜெக்ட்டோட லாபத்தையும் சேர்த்து அள்ளிடலாம். நிச்சயமா பாஸ் இதை விட ஒத்துக்கமாட்டாங்க. அவனோட திறமையை காட்டி நம்மை ஜெய்க்கட்டும். யார் வேண்டான்னு சொன்னது?”

“பிரபா புரிஞ்சுக்க… என் கல்யாணம் நின்னு போய்டும். அப்பாகிட்ட பேசிட்டேன். அச்சு வீட்டில் இருந்து பெண் கேட்டு வராத வரை அப்பா எந்த ஸ்டெப்பும் எடுத்து வைக்க மாட்டாங்களாம். அர்ஜுன் இந்த பிராஜெக்டை சக்ஸஸ் பண்ணாத் தான் கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு அவன் அப்பா சொல்லிட்டாராம்…”

“ஒரு நிமிஷம் பவானி, அவன் தான் உங்கள லவ் பண்ணலன்னு சொன்னானே அப்புறம் எப்படி இப்போ கல்யாணம்?” புரியாமல் கேட்க,

“எனக்காகத் தான் மனசை மாத்திட்டுருக்கான் பிரபா. அவன் வெற்றிக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது என்னோட கடமை இல்லையா?”

‘இந்த சூழ்ச்சியை இவ புரிஞ்சுக்கவே மாட்டாளா? பாவி, எப்படி கதை சொல்லியிருக்கான்? ஏன்டா ஒரு பொண்ணோட பாவத்தை வாங்கி கொட்டிக்கிறீங்க?’ பெரும் ஆயாசம் தோன்றினாலும் இவள் ஓயப் போவதில்லை என்பதை உணர்ந்தவன்,

“ஒண்ணு செய்யலாம் மேம். நாம கொட்டேஷன் அனுப்புவோம்… அதில் ஒரு காப்பிய கொண்டு போய் அர்ஜூன்கிட்ட கொடுங்க. அதுக்கு மேல அவன் பாத்துப்பான். உங்க அப்பாவும் நம்மை கேள்வி கேட்க மாட்டாங்க. வழக்கம் போல் இந்த டெண்டரும் அவங்களுக்கே கிடைக்கும்”

“நல்ல ஐடியா தான். தேங்க்ஸ் பிரபா…”

“உங்க மேல வருத்தம் தான் மேம்… உங்க கம்பெனியோட வளர்ச்சியை நீங்களே கெடுக்கறீங்க…!” தாட்சண்யமின்றி சொல்லிவிட்டான்.

“எனக்கு புரியுது பிரபா… கல்யாணத்துக்கு பிறகு தொந்தரவு இல்லாமல் நம்ம பிஸ்னஸை பார்க்கலாம்.”

“எந்த நம்பிக்கையில் சொல்றீங்க மேம்? வேறெதாவது விஷயத்தில் மறுபடியும் உங்களை கார்னர் பண்ணுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?”

“போதும் பிரபா! நீ என்னை குழப்பாதே… அப்படி ஏதாவது செய்தால் போடா நீயும் வேண்டாம், உன்னோடான வாழ்க்கையும் வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சுட்டு வந்துடுவேன்!”

“அதைத் தான் இப்பவே செய்ங்கன்னு சொல்றேன்…” விடாமல் அவனும் பதிலுக்கு பதில் கொடுக்க,

“நான் அச்சுவை கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கென்ன பிரச்சனை?” நேராகவே விஷயத்திற்கு வந்தாள்.

“பெர்சனலா எதுவும் இல்ல. நல்ல பொண்ணோட வாழ்கை வீணா போகக் கூடாதுங்கிற எண்ணம் தான்!” எங்கோ வெறித்தபடி அவன் கூற,

“ஏன் இந்த அக்கறை?” எள்ளலுடன் கேட்டவளின் விழி பார்த்தவன்,

“என்னை படிக்க வச்சவரோட பொண்ணுங்கிறதால தான். நீங்க கஷ்டப்பட்டா அது உங்க அப்பாவையும் பாதிக்கும்ங்கிறதால தான்!

உங்களுக்கே உங்க மேலும், கம்பெனி மேலும் இல்லாத அக்கறை எனக்கெதுக்கு? கொட்டேஷனை உங்க மெயிலுக்கு பார்வேர்ட் பண்ணிவிடுறேன்.”

அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல் அவன் தன் கணினிக்குள் முகத்தை நுழைத்துக் கொள்ள விடைபெறாமலேயே வெளியேறினாள் பவானி.

‘பவானியின் வாழ்வை காப்பாற்ற இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. நம்பிக்கை துரோகம் தான் ஆனால் வேறுவழி இல்லை.

எங்கிருந்தாலும் என் பார்பி நல்லாயிருக்கணும். அவளோட நிம்மதியும், சந்தோஷமும் எனக்கு முக்கியம்.

சாரி வனிம்மா, தப்புன்னு தெரிஞ்சே தான் செய்றேன்.’ முடிவெடுத்தவனாய் டெண்டர் அமவுண்டை மாற்றிவிட்டான்.

அதன் விளைவாக டெண்டர் பவானி இன்ஜினியரிங்கிற்கே கிடைத்துவிட அலுவலகமே கொண்டாட்டத்தில் இருந்தது.

அப்பொழுது தான் சிவானந்தன் பிரபாவுக்கு அழைத்து வாழ்த்துச் சொன்னார். அங்கே ஆவேசமும், கோபமுமாய் நுழைந்தாள் பவானி.

“பிரபா!” அவளது அலறல் அலுவலகத்தையே கிடுகிடுக்கச் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“நீ…” என தனது செகரடரியை பார்க்க, அவன் வெளியேறிவிட்டான்.

“எல்லோரையும் உன் கட்டுக்குள் வச்சிருக்க திமிரா? ஏன் இப்படி பண்ண பிரபா? உன்னால நான் அங்கு நம்பிக்கை துரோகியா பார்க்கப்படுறேன். இனி என்னை திரும்பிக் கூட பார்க்கப் போவதில்லைன்னு சொல்லிட்டான் அர்ஜுன்.”

“சாரி மேம். நீங்களும், இந்த கம்பெனியும் நல்லா இருக்கனும்னு தான் அமவுண்டை மாத்திட்டேன்.”

“இது என் கம்பெனி. அது நல்லா இருக்கு இல்ல, நாசமாப் போகுது உனக்கென்ன? ஒவ்வொரு தரமும் நீ இங்கு வேலை பார்ப்பவன் என்பதை மறந்துடற பிரபா!” தன் காதல் கைகூட இருந்த ஒரு வழியையும் அடைத்துவிட்டானே என்னும் வெறியில் கொட்டித் தீர்த்தாள்.

“உங்களுக்கு இது சாதாரண கம்பெனியா இருக்கலாம். சிவானந்தன் ஐயா கஷ்டப்பட்டு உருவாகியிருக்கார். உழைப்பு, பணம்… இதோட அருமையெல்லாம் தெரியாததால் தான் இப்படி பேசறீங்க…

உங்க சொந்த உழைப்பில் உருவாக்கியிருந்தால் கஷ்டம் தெரியும். அடுத்தவனுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது அவ்வளவு சுலபமில்லைங்கிறது புரிஞ்சிருக்கும்…” என்று முடிப்பதற்குள்ளாகவே அவன் கன்னத்தில் அவள் கரம் இடியாய் இறங்கியது.

“இனிஒரு வார்த்தை பேசின…” விரல் நீட்டி எச்சரித்தவளின் வார்த்தைகளை கேட்கசொல்வதை கேட்க, அவன் அங்கு இல்லை.

இனி பிரபா அவளிடம் வேலை பார்ப்பானா? அர்ஜுனைப் பற்றி பவானி ஐயம் திரிபுர அறிந்துகொள்வாளா? பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே…

உன்மத்தமாகலாம்…

2 Comments

 1. Malarj says:

  Nice update… Eagerly waiting for next ud… Going interestly….

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s