காலை வணக்கம் தோழமைகளே…
நேற்று சொன்னது போல் பதிவு கொடுக்க முடியவில்லை மன்னிக்கவும். இதோ உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #23 பதிவேற்றம் செய்துவிட்டோம்.
நந்தினியின் கோபம் எல்லை மீற, அருகே இருந்த கிளச்சை(purse) தூக்கி வீசினாள்.
அதன் கூர்மையான முனை அவன் நெற்றியை பதம் பார்த்தது. வண்டியை ஓரமாக நிறுத்தியவன் ரத்தத்தை டிஸ்யூவினால் ஒற்றி எடுக்க, மிரண்டு போனாள் நந்தினி.
“ஐயோ…! சாரி விஜய்!! தெரியாமல்… இப்படி காயப்படுத்தும்னு நினைக்கல… ரொம்ப வலிக்குதா?” விழிகளில் நீர் திரள அவன் முகம் தாங்க,
“பெரிதாக ஒன்றும் காயம் இல்லை, லேசான ரத்த கசிவு தான். உனக்கு இன்னும் ஆழமாக இருந்தது இல்லையா நந்தினி?”
“சாரி… சாரி… ரியலி சாரி விஜய்! கோபத்தில் என்ன செய்றேன்னு தெரியாம நடந்திடுச்சு…”
“ஷ்… போதும் நந்தினி… இதிலும் திருப்பிக் கொடுத்துவிட்டாய் என்பதில் மகிழ்வு தான். இனியேனும் உன் மனஉளைச்சல் குறையட்டும்… வருந்தாதே… இனி ஒருமுறை இதை போல் செய்யாதே… அது நம் இருவர் உயிருக்கும் ஆபத்து.
வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு செய். எங்கு போகலாம் நந்தினி? வீட்டிற்கா? இல்லை லாங் ட்ரைவா?” ஒன்றுமே நடவாதது போல் அழகாக சூழலை மாற்ற நினைக்க காதல் கொண்ட மனது விழித்துக்கொண்டது, அவன் தோள் சாய்ந்து விசும்ப,
“எதற்கு இந்த அழுகை நந்தினி? இப்பொழுதாவது புரிகிறதா? உனக்கு இன்னும் காதல் இருக்கிறதென்பது…. எல்லாவற்றையும் மறந்துவிடேன். என்னை புதிய விஜயாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய். ப்ளீஸ் நந்தினி…” இதமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான்.
மேலும் படிக்க கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள். நன்றிகள் பல.
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.
https://drive.google.com/file/d/1Qf4AsEF2Zvshsc537A1SjVKHPjJu490p/view?usp=sharing