என்னருகே நீயிருந்தால்…!!!டீசர்…

மாலை வணக்கம் தோழமைகளே…

சுமி அடுத்து என்ன செய்வான்னு எல்லோருமே சரியா கணிச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். உங்களுக்கான டீசர் இதோ…

“என்னை சந்தேகப்படுற மாதிரி சொன்னது தப்பில்லையா மாமா?” என்றவளிடம் பெரும் வேதனை வந்து ஒட்டிக் கொண்டது.

“நடிக்காதடி! நான் உன்னை சந்தேகப்படமாட்டேன்னு உனக்கு நல்லாத் தெரியும்! நான் எதை நினைச்சு பயந்தேனோ அது தான் நடந்திருக்கு! போ! அவனுக்கு நீ வேணுமாம்! உனக்கும் தான் அவன் கூட வாழ ரொம்ப பிடிக்குமே… அவன் கூடவே போ!” என்றவனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது அவள் கரம்!

எரியும் கன்னத்தை கரம் கொண்டு அழுத்தியபடி மனையாளை பார்க்க, அவளோ காளி இல்லை… இல்லை… பத்திரகாளி அவதாரம் எடுத்திருந்தாள். கண்களில் கண்ணீர் பெருக, கோபத்தில் மூக்கு விடைக்க, உக்கிரப் பார்வையுடன் பேசுவதற்கு வார்த்தைகள் தேடிக் கொண்டிருந்தவளின் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

“அம்மு!” தோள் தொட,

“சீ! கைய எடு!” அவள் போட்ட அதட்டலில் அவன் கரம் தானாக இறங்கிவிட்டது.

“நான் என்ன அண்ணனும், தம்பியும் விளையாடுற சொப்பு சாமானா? வேண்டாம்ன்னு நீ தூக்கி கொடுக்கிறதுக்கும் தா தான்னு அவன் வாங்கிக்கிறதுக்கும்?! மனுஷி டா! மனசு முழுக்க உன்னை மட்டுமே சுமந்துக்கிட்டு இருக்க மனுஷி!

நீ என் உசுருடின்னு சொன்னா பத்தாது! உசுரை பொக்கிஷமா பாதுகாக்கனும்! அவன் கேட்பானாம்… இவன் கொடுப்பானாம்… என்னை பத்தி தெரியாம ஆடிக்கிட்டு இருக்க, நான் தங்கபாண்டியன் மகங்கிறதை மறந்துடாத. குடும்பத்தோட விஷம் வச்சு கொன்னுடுவேன்!”

‘கொலைகார குடும்பத்தில் பிறந்தவன்னு நிரூபிக்கிறாளே…! கூண்டோட கைலாசம் அனுப்பிடுவாளாமே…?!’ எண்ணிய நொடி மனம் மந்தகாசமாய் மலர, அழுகையும் கோபமுமாய் நின்றவளை வாரி அணைத்துக் கொண்டான்.

“விடு…டா! விட்டுத் தொலை…!” அவனிடம் இருந்து விலகப் போராட இன்னும் ஆழமாய் மார்போடு அவள் முகம் புதைத்துக் கொண்டவனுக்கு மனம் நிறைந்து, குழப்பமும் தெளிந்தது.

“அப்படியெல்லாம் உன்னை தூக்கி கொடுத்திட மாட்டேன்டி!” அவன் சொல்ல நினைத்ததை அந்த அணைப்பு சொன்னது.

கணவனது கட்டிப்பிடி வைத்தியத்தில் மெல்ல மெல்ல நிதானத்திற்கு திரும்பியவளின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க,    

“ஸாரி… ஸாரி… ஸாரி அம்மு! மாமாவை மன்னிச்சுடுடா. நான் பேசினதெல்லாம் தப்பு தான். மன்னிச்சுடு அம்மு!” மன்னவன் மன்றாட மங்கையோ முகம் திருப்பிக் கொண்டாள்.

“சத்தியமா உன்னை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் சொல்லலைடி. என்னை நம்பு ப்ளீஸ்… விளையாட்டுக்கு சொல்லப் போய் அது வினையாயிடுச்சு. ரியலி ஸாரி அம்மு!” கன்னங்கள் தாங்கி கெஞ்சினான். கல்நெஞ்சக்காரி அவனை கலங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள்.

“இப்போ நான் என்ன தான் டீ பண்ணனும்? மன்னிச்சுடு மகமாயின்னு உன் கால்ல விழவா?”

“நிஜமாவே கால்ல விழணும்ன்னு நினைக்கிறவங்க இப்படி கேட்டுகிட்டு இருக்கமாட்டாங்க. இந்நேரம் விழுந்திருப்பாங்க.” மிதப்பாக சொன்னாள்.

‘திமிரை பாரேன்! நான் இவ கால்ல விழணுமாம்?!’ தன்மான சிங்கம் சிலிர்த்துக் கொள்ள வேகமாய் அவள் பாதங்கள் நோக்கி குனிய,

“ஐயோ! மாமா…” விளையாட்டுக்கு தானே சொன்னோம். இவன் நிஜமாகவே விழப் போகிறானே எனும் பதட்டத்தில் அவன் தோள் தொட்டு நிறுத்தப் போக, அவனோ பட்டென அவளை கைகளில் ஏந்திக் கொண்டு,

“உன் கால்ல நான் விழணுமா? பேராசைக்காரிடி நீ!” கண்ணோரம் சுருங்கச் சிரித்தான்.

4 Comments

  1. Sorna says:

    Wowww… Nice teser waiting for the episode.. 🥰🥰🥰

    Liked by 1 person

  2. mindumathi says:

    Nice tea

    Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s