“தங்கபாண்டியன்! மிஸ்டர் தங்கபாண்டியன்…” சக்தி அழைக்க, வேகமாய் அவன் வாயை மூடியவள்,
“கத்தாதீங்க மாமா, கேட்கப்போகுது…” படபடப்புடன் சொல்ல,
“கேட்கனும்னு தான் கத்துறேன். என்ன சார் பிள்ளையை பெத்துக்கிறதுக்கு பதில் தொல்லையை பெற்று என் தலையில கட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்கனும்” என்றவனின் புஜத்தில் பட்டென அடித்து,
“நான் தொல்லையா?” இடுப்பில் கரம் பதித்து ஒய்யாரமாய் நின்று முறைக்க,
“இல்லையா பின்ன? நான் இல்லாமல் போனால் என்னையும், என்னோடான தருணங்களையும் மறந்து நீ இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் வரணும்னு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினா, முதல்ல சொன்னதை மட்டும் பிடிச்சுக்கிட்டு தொங்கியிருக்க, அதுக்கப்புறம் சொன்னதெல்லாம் உன் மூளைக்கு எட்டவே இல்லை அப்படித்தானே? ஒருவேளை நான் வராம போயிருந்தா நீ பைத்தியமாயிருப்படீ, லூசு!” சிடுசிடுப்புடன் சொல்ல,
“இப்பவும் பைத்தியமாத் தானே இருக்கேன், மாமா?” கண் சிமிட்டி, தலை சாய்த்து சிரிக்க,
“என்ன மண்ணாங்கட்டிக்கு என்னை இப்படி வகை தொகையில்லாம விரும்பித் தொலைக்கிறன்னு தான் கேட்கிறேன்?” பூவையவளின் தோள் பற்றி உலுக்கியவனின் கோபம் கூடியதே அன்றி குறையவில்லை.
“ஏன்னா…” விழிகளை விரிக்க,
‘என்ன சொல்லப் போகிறாள்?’ எனும் எதிர்பார்ப்புடன் அவன் அவளையே விழியெடுக்காமல் பார்க்க,
“நீங்க என் உயிர் மாமா!” உதடு குவித்து முன்னோக்கி வர அவனோ ஐவிரல் கொண்டு தன் இதழ் மூடிக் கொண்டான்.
“மாமா… கையை எடுக்கப் போறீங்களா இல்லையா?” நினைத்ததும் முத்தமிட முடியாமல் போனதால் நச்செனே அவன் காலில் மிதிக்க,
“ஷ்! வலிக்குதுடி… அடங்காப்பிடாரி! அறிவிருக்கா? காதல் வந்தா கபாலத்தை கழட்டி வச்சுடுவியா? ஒருவேளை யானை மிதிச்சு நான் செத்திருந்தா, நீயும் செத்து தொலைச்சிருப்படி… கண் மண் தெரியாத காதல் என்னத்துக்கு?” தான் இல்லாவிட்டால் மனையாளும் மடிந்து போகக் கூடுமே எனும் பதட்டத்துடன் அதட்டலாய் கேட்டான். (கேள்விக்கான பதில் இது தான் மக்களே)
“ம்! செத்து தான் போவேன்… உங்க டார்லிங்குக்கு மட்டும் தான் சொர்க்கத்தில் இடம் போட்டு வைப்பீங்களா? எனக்கும் இடம் பிடிச்சு வைங்க. என் கூடவும் டூயட் பாடுங்க! நீங்க தானே சொன்னீங்க…” மிடுக்காய் சொல்ல,
“லூசு, லூசு! அந்த கிழவியும், நீயும் ஒன்னா? அது வாழ்ந்து முடிச்சிடுச்சு… நீ இன்னும் வாழவே ஆரம்பிக்கலடி!”
“அஃப்கோர்ஸ்! ஆனா நீங்க இல்லாம நான் எப்படி வாழ முடியும்?” பூங்கரங்களை மாலையாக்கி கணவனின் கழுத்தில் படரவிட்டு தன்னை நோக்கி இழுக்க, அவனோ கற்சிற்பம் போல் அசையாது நின்றபடி,
“இப்படியே பேசிட்டு இருந்த அறைஞ்சிடுவேன் பார்த்துக்க… கணவன், மனைவியோ, காதலர்களோ உன்னை மாதிரி யாராவது சாக தயாரா இருக்காங்களா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?” இயலாமையுடன் கேட்டான்.
“அடுத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது மாமா. ஆனா நான்…” என்றவளை மேற்கொண்டு சொல்லவிடாது தன் கரம் கொண்டு வாய் மூடி,
“ப்ளீஸ், எதுவும் சொல்லிடாத அம்மு! நான் அவ்வளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை.” இது என்னவிதமான அன்பு என்று தெரியாத தவிப்புடன் சொல்ல,
“உங்க ஒர்த் என்னன்னு உங்களை விட எனக்கு தான் நல்லா தெரியும்” புருவம் உயர்த்தி சொன்னவள் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் கணவனை மீண்டும் தன்னை நோக்கி இழுக்க, மனையாளின் பேரன்பு அவனை பித்தம் கொள்ளச் செய்ய, இம்முறை மறுப்பின்றி அவள் புறம் சாய்ந்தவனிடம் பெண்ணவளின்………………
கீழே இருக்கும் வீடியோவை பார்த்து அடுத்து என்ன நடந்திருக்கும்ன்னு யூகிச்சுக்கோங்க மக்களே…
super
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
Wow sema episode mam🥰
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike