மாலை வணக்கம் தோழமைகளே…
மகிழ்வான செய்தி ஒன்றுடன் வந்திருக்கிறோம். “உன் மடி சாயவா…!!!” எனும் கதையை அமேசானில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். விரும்புபவர்கள் வாங்கிப் படித்து மகிழுங்கள்.
உன் மடி சாயவா…!!!
இக்கதையின் நாயகனான சித்தார்த், அதிநாகரீக நகரமான மும்பையில் வசிக்கும் நவநாகரீக இளைஞன். ஒருமுறைக்கு இருமுறை மும்பையின் ஆண் அழகன் பட்டத்தை வென்றவன். கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படித்தவன், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவன், காண்பவரை வசீகரிக்கும் தோற்றமும், கை நிறைய புரளும் பணமும், கண்டிப்பற்ற வளர்ப்புமாய் வலம் வருபவன். திருமணம், குடும்பம் என்றெல்லாம் யோசிக்கக் கூட விரும்பாதவன்.
நாயகி சிந்துஜா, சிங்காரச் சென்னையில் கோடீஸ்வரரின் மகளாய் பிறந்திருந்தாலும் அன்பும், அடக்கமும் ஒருங்கே பெற்று அமரிக்கையாய் வளர்ந்தவள். தனக்கு கணவனாக வருபவனைப் பற்றி ஆயிரம் கற்பனைகளும், கனவுகளும் கொண்டவள். இவ்விருவரும் தாயற்று, தந்தையால் மட்டுமே வளர்க்கப்பட்டவர்கள்.
கிஞ்சித்தமும் பொருந்தாத இவ்விரு துருவங்களையும் விதி வெகு அழகாய் திருமண பந்தத்தில் இணைக்கிறது. அவ்விதியே அழகாய் விளையாடி அப்பந்தத்தில் இருவருக்கும் மூச்சுமுட்டவும் வைக்கிறது. இதில் இருவரும் அந்த பந்தத்தின் முடிச்சை கெட்டிப்படுத்தி இறுக்கினார்களா? இல்லை தளரவிட்டு தனித்து தள்ளிப் போனார்களா? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
இவர்களின் உறவை சுவாரசியமாக்க அவர்களுடைய தனித்தன்மையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த சில பல கதாபாத்திரங்கள் கதையில் உள்ளன. இவர்களினிடையே காதல் வேரூன்றி விருட்சமாய் வளர்ந்ததா? அல்லது இவர்களின் அவசரத்தினால், அசட்டுத்தனத்தினால் காதல் கசந்து மாண்டு போனதா… என்று தெரிந்துகொள்ள இப்பொழுதே படியுங்கள்….!!!