காலை வணக்கம் தோழமைகளே…
அடுத்த கதைக்கான தேர்வில் “உன்மத்தம் உன்மேலாகிறேன்” கதைக்கான வரவேற்பு தான் அதிகமாக இருக்கிறது. நாங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் உங்களுக்கு தேவையான கதையின் பெயரை விரைவில் பதிவு செய்யுங்கள். அதன் அடிப்படையில் நாளை முதல் புதிய கதை துவங்கும்.
“என்னருகே நீயிருந்தால்” கதையில் பலரால் ராணாவை பொருத்திப் பார்க்க முடியாததால் மீண்டும் நம் பழைய ஹீரோவுடனேயே தொடருவோம். படத்திற்காக கதையை படிக்காமல் தவிர்ப்பவர்கள் இன்றைய பதிவை மட்டுமாவது படித்துப் பாருங்கள். இது தான் கதையின் திருப்பு முனையாக அமையப் போகும் பகுதி! நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்!
என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #15 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்துவிட்டு கட்டாயம் உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். வழக்கமாய் கதையை முற்றிலுமாய் எழுதி முடித்துவிட்டு பதிவேற்றம் செய்வது தான் எங்கள் இயல்பு. “தள்ளிப் போகாதே” கதைக்குப் பிறகு மீண்டும் ஓர் முயற்சியாய் இக்கதையை எழுத எழுத பதிவிடுகிறோம். ஆதலால் உங்களுது கருத்துக்கள் மூலமாக உங்கள் மனம் படிக்க விரும்புகிறோம். தவறாது பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே… நன்றிகள் பல.
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.
https://drive.google.com/file/d/1jq5_QJJlPcSJrfB_ZXYpnxqZHIDsB2Qg/view?usp=sharing
hayoooooo yellam sothaputhu pawam sakthi
LikeLike
pavam thaan! nithanamaa iruntha ellam sariyakum.
LikeLike
s pa.
LikeLike
Ayyo pavam sakthi… Avan enna pannuvan…..
LikeLiked by 1 person
kalla thaan vilanum verenna panna mudium?
LikeLike
s pa.
LikeLike
சரிதா சூப்பர் 👏👏👏👏👏
அவ கேட்டதெல்லாம் சரிதான் 👌எனக்கு ஒண்ணு புரியல சரிதா நம்பலைன்னு சொல்றானே அவனை நம்பி அவ என்ன சொல்லணும்னு எதிர் பாக்கிறான் இப்போ அடுத்து சுமி மேலே அவன் கோபத்தை காட்டின விதம் 😠 😠😠😠
LikeLiked by 1 person
சக்திக்கு சரிதாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை சூழ்நிலை தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு அவ நம்பனும். நடந்த திருமணத்தில் சக்திக்கும் வருத்தம் தான்னு அவ நம்பனும். சரிதாவை பிரிந்ததில் ஒருபோதும் மகிழ்வில்லை. பெரும் குற்ற உணர்வு தான்னு அவ நம்பனும். அவ்வளவு தான்! ஆற்றாமையும், இயலாமையும் போட்டி போட நிலைதவறி முட்டாள் தனம் பண்ணிட்டான். நன்றி பா.
LikeLiked by 1 person
மொத்தத்துல இவன் மேல எந்த தப்புமில்ல எல்லாரும் சேர்ந்து துரையை கைய கால கட்டி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க இவருக்கு ஒண்ணுமே தெரியாத பச்சை மண்ணுன்னு அவ நினைக்கனுமா அவ தான் பொட்டில் அடிச்ச மாதிரி கேட்டாளே அப்ப கூட இந்த மரமண்டைக்கு புரியல எல்லாம் இவளாளன்னு சுமிய படுத்துறான் படிச்சவன் தானே சரிதா கிட்ட பேசுறத்துக்கு முன்னே தான் புரியலை அவ அவ்வளவு கேட்டப்பிறகும் அவ நம்பலைன்னு ஃபீல் பண்றானே இவனை என்ன செய்ய எனக்கு அவ்வளவு கோபம் வருதுப்பா இவன் என்ன மூஞ்சை திருப்பினாலும் சின்னப்பிள்ளை போல கூடவே சுத்திக்கிட்டு இருந்த பொண்ண இப்படி ஆக்கிட்டானே பட்டாம்பூச்சி சிறகை பிச்சி போட்டமாதிரி பண்ணிட்டான் முட்டாள்
இனி அவளை எப்படி சமாதானப்படுத்துவான்
LikeLiked by 1 person
அவன் செய்தது தப்பு இல்லன்னு சொல்லை பா. அப்படி ஒரு தப்பு செய்ய அவனை தூண்டியது அவனோட சூழல் தான்னு அவ புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறான். சரிதா ரொம்ப மெசூர்டா நடந்துப்பான்னு தான் அந்த எதிர்பார்ப்பும். சுமிகிட்ட முட்டாள்தனமா தான் நடந்துக்கிட்டான். என்ன இருந்தாலும் இவனை அவ விரும்புறதால சீக்கிரம் சமாதானமாகிடுவா பாருங்க. ஏன்னா காதலுக்கு கண்ணு மட்டுமில்லை… மூளையும் இல்லை.
LikeLiked by 1 person
அது சரிதான் மூளையும் இல்லைதான் சுமி சீக்கிரமே சரியாகனும் மா
LikeLiked by 1 person
சரியாக்கிடலாம் பா.
LikeLiked by 1 person
Superb episode
LikeLiked by 1 person
நன்றி மா.
LikeLike