சொந்த வீடு வாங்க…

மாலை வணக்கம் தோழமைகளே…

நேற்றைய எங்களது மனப்பகிர்விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், பதில்களும் எங்களை ரொம்பவும் மகிழ்வித்தது. எங்களது கதையில் நீங்கள் கொண்டிருக்கும் நாட்டம் தெளிவாக தெரிகிறது மகிழ்ச்சி! உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல. தொடர்ந்து இணைந்திருப்போம்!

இன்றைய தைப்பூசத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான சிறப்புப் பதிவாய் முருகனின் மகிமையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம் படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

கீழே பாடலுக்கான வீடியோ பதிவும், அனுபவ நிகழ்விற்கான வீடியோ பதிவும் கொடுத்திருக்கிறோம். பார்த்து மகிழுங்கள். வீடியோ தொகுப்பின் உரிமையாளர்களான SRN VIDEO மற்றும் my world இருவருக்கும் எங்களது நன்றிகள்.

இன்றைய பதிவு சொந்த வீடு வாங்க வேண்டும் எனும் கனவோடு காத்திருப்பவர்களுக்கானது.

சொந்த வீடு வேண்டும் எனும் எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். ஆயினும் அதை பெறுவதில் சற்று சிரமங்கள் இருப்பது இயல்பு தான். சிலரோ சொந்த வீடா? எங்களுக்கெல்லாம் அது எட்டாக் கனி என்று சொல்வதும் உண்டு. பொருளாதாரத்தில் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும், கந்தன் அருள் இருந்தால் நிச்சயம் நம்மாளும் வீடு வாங்க முடியும். ஆம் தோழமைகளே, இதுவும் எங்களது அனுபவமே. ஆகவே நீங்களும் கீழே இருக்கும் பதிகத்தை நம்பிக்கையுடன் படித்து பயன் பெறுங்கள். படிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை பாடலை கேட்டாலே நாம் கேட்பதை கொடுப்பான் சிறுவாபுரி குமரன்!

வெற்றி வேல் முருகனுக்கு

அரகரோகரா!        

சிறுவாபுரி பதிகம்

காப்பு:

சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல்

திருப்பாதம் முந்தி தொழுது

புவியளாக் குன்றந் தனிலாடும் வேலன்

புகழ் பாட நல்ல தமிழை

சுவையோடு தந்து நிறைவாகச் செய்யத்

துணையாக வேண்டும் எனவே

கவிபாடி வேண்டிக் கசிந்த்தேது கின்றேன்

கணநாதன் எந்தன் துணையே!

பதிகம்:

கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல்

கடல்போல தந்து விடுவான்

வெல்லாத கோழை வெகுவீரனாக

விதிமாற்றி வைத்து விடுவான்

நில்லாத செல்வம் நிலையாக இல்லில்

நிதங்கூட செய்து விடுவான்

செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

எனக்காக இல்லம் இலையே என்றேங்க

எழில்வீடு ஐயன் தருவான்

பணக்கரான் என்றும் பரதேசி என்றும்

பார்த்தாள எண்ணி யறியான்

தனைக்காண வந்து தமிழ்பாடும் அன்பர்

துணையாக என்றும் வருவான்

தினைக்காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல்

சிறுவாபுரிக் குமரனே!

நெல்லோடு வாழை நிறைவாக சூடும்

 நிலமோங்கு நல்ல பதியாம்

வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர்

வென்றடி நின்ற இடமாம்

பொல்லாத சூரன் புரமோட்டி வேலன்

பொழுதோடு தங்கும் இடமாம்

செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

தவமோங்கு தந்தை செவியோடி பேசி

சதுர்வேதம் சொல்லி விடவே

சிவசாமி நீயும் தென்சாமி மலையில்

திருவீடு கொள்ள விலையோ

புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில்

புகவேணும் நல்ல குடியே

சிவபால தேவன் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

எட்டாத வானோர் எழிலான வீட்டில்

எக்காள மிட்டுப் புகுந்து

கொட்டாடும் சூரன் குலநாசமாகக்

கூர்வேலைத் தொட்ட குமரன்

தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில்

தானாள விட்ட குமரன்

செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

சூராதி சூரன் தூளாகிப் போக

ஜெகமேவு தேவர் மகிழ்ந்து

காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக்

கல்யாணம் செய்து தருவார்

ஏராரும் வேலன் இல் வாழ்க்கை காணும்

இனிய பரங்குன்றம் எழிலாம்

சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

ஒருயானை போன்ற கணநாத வள்ளல்

ஒப்போடு அன்று உதவ

குறமாது தன்னை மணமாலை சூடிக்

கொண்டாடும் இன்ப நினைவில்

தருமேவு நல்ல தணிகா சலத்தில்

தனிவீடு கொண்ட குகனாம்

சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

சிற காட வானில் பறந்தாடும் புள்ளும்

சிறுகூடு கட்டி வளரும்

குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட

அறியாத பிள்ளை எனையும்

உறவோரும் என்றும் ஒப்போடு காண

உடனோடி வந்து அருளி

சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம்

எல்லார்க்கும் வாய்ப்ப திலையே

பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும்

பாரோங்கும் உண்மை நிலையே

ஊராரும் போற்றும் பேரோடு வாழ

உடனோடி வந்து அருளி

சீரான இல்லம் தோதாய் அருள்வான்

சிறுவாபுரிக் குமரனே!

மெய் பேச வாழ்வில்

விளையாது துன்பம்

விதி கூறும் உண்மை இதுவே

பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும்

புவி வாழ்ந்த தென்றும் இலையே

கையாற வேலன் கால் தேடிப் பற்றக்

கவி னாடும் இன்ப நிலையே

தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான்

சிறுவாபுரிக் குமரனே!

வரம்:

இப்பாடல் பத்தும் எப்போதும் பாட

எந்நாளும் இன்பம் மிகுமே

செப்பாத போதும் தப்பேதும் இல்லை

செவியாறக் கேட்பின் நலமே

தப்பாது தேடும் தரமான வீடு

தனதாக வந்து விடுமே

அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல்

அவன் ஆசி உண்டு நிதமே!

வெற்றி வேல் முருகனுக்கு

அரகரோகரா!        

பாடல்:

அனுபவம்:

4 Comments

 1. Nagajothi says:

  அருமையான அற்புதமான பதிவு, பாடல் கேட்க மிக இனிமையாக இருந்தது முருகன் துதி, சிறுவாபுரி முருகன்னை இந்த பதிவின் மூலம் தான் தெரிந்துகொண்டேன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌺🌺🌺

  Liked by 1 person

  1. ammuyoga says:

   நன்றி பா.

   Like

 2. thushiRajah says:

  thank you.

  Liked by 1 person

  1. ammuyoga says:

   நன்றி பா. வாழ்க வளமுடன்.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s