
“சரி, நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா இங்கே நடந்ததை மறைச்சு ஏமாத்த முடியாது. அவங்க வீட்ல இதைப் பத்தி சொல்லிடனும். அது அந்த பொண்ணுக்கிட்டயா? இல்ல பெத்தவங்ககிட்டயான்னு நீங்க முடிவு பண்ணுங்க. எல்லா உண்மையையும் சொன்னதும் மறுபேச்சு இல்லாம மணவறைக்கு போறேன்.” உணர்ச்சிகள் துடைத்த குரலில் சொல்ல,
“சின்ன பொண்ணு, அதுக்கென்ன தெரியும்… ஆத்திரத்துல கல்யாணம் வேண்டாம்னு வீம்பு பண்ணுச்சுன்னா…” அப்பத்தா பதற,
‘அப்படி எதாவது நடந்தா என்னைவிட சந்தோசப்படுறவங்க யாரும் இருக்க மாட்டாங்க…’ என எண்ணியவன் அமைதி காக்க, (சாட்சிக்கராங்க காலில் விழுகிறதை விட சண்டைக்காரன் காலில் விழுறது நல்லதுன்னு யோசிச்சுட்டே … பார்க்கலாம், தந்திரம் பலிக்குதா… இல்ல பலி கேட்குதான்னு)
“ஸார்! வீடியோ கால் போடுறேன்… அக்ஸப்ட் பண்ணுங்க.” என்றதோடு அதை செயல்படுத்தி ஸ்பீக்கரையும் ஆன் செய்தான். சக்தியை கண்டவர் தனது மாப்பிள்ளை வெற்றி என எண்ணிக் கொண்டு,
“என்ன மாப்பிள்ளை இது… தாலி கட்டுற நேரத்தில் இப்படி வீட்ல இருந்துகிட்டு அடம் பிடிக்கிறிங்களே இதெல்லாம் நல்லாவா இருக்கு? நீங்க எதிர்பார்க்கிறதைவிட நான் சிறப்பாவே செய்வேன். அதே நேரம் என் பொண்ணு மனசு சங்கடப்பட்டா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்…” என சீற,
“சார்… நான் உங்க மாப்பிள்ளை வெற்றிவேல் இல்ல… அவனோட தம்பி சக்திவேல். நாங்க ரெண்டு பேரும் ரெட்டையர்கள்.”
“மாப்பிள்ளைக்கு ஒரு தம்பி இருக்காருன்னு தெரியும் ஆனா நீங்க ரெட்டைப் பிள்ளைங்கன்னு தெரியாது. மாப்பிள்ளை எங்க தம்பி?” வீடியோவின் வழி மற்றவர்களை பார்த்தவர் வெற்றியை காணாது கேட்க, நடந்த அனைத்து விஷயத்தையும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி சொல்ல…
அடுத்து என்ன நடந்திருக்கும்? தங்கபாண்டியன் தன் மகளை சக்திக்கு கட்டிக் கொடுப்பாருன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க? பகிர்ந்துக்கோங்க தோழமைகளே…
சக்திவேல் தானே மேம் ஹீரோ.. 🥰
LikeLiked by 1 person
ஆமாம் பா!
LikeLike
Vettri ya thaan villan aakkitteengaley 😜😜.shakthi thaan hero 😘😘
LikeLiked by 1 person
ha ha ha… sakthi than hero sari! vetri vilannu nanga eppo sonnom?
LikeLike
கண்டேன் காதலை next episode upload பண்ணுங்க மேம் please…
LikeLiked by 1 person
புதன் அன்று வரும் பா.
LikeLike
கண்டிப்பா ஏன்னா பொண்ணு வாழ்க்கை ஒருபக்கம் அவர் மானம் கவுரவம் பார்ப்பார் வெற்றியை விட உண்மையை சொல்லி மன்னிப்பு கேக்கற சக்தி ஆயிரம் மடங்கு மேல் ❤
LikeLiked by 1 person
rightuuuuuu
LikeLiked by 1 person