உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் # 33

சூரியன் முகத்தில் தன் கதிர்களை பரப்புவதை உணர்ந்து, மெல்ல சோம்பல் முறித்து எழுந்தவள், ஆபீஸிற்கு கிளம்பிக்கொண்டிருக்கும் கணவனைக் கண்டாள். எப்போதும் சிரித்த முகமாய் தனக்கு குட்மார்னிங் சொல்பவனுக்கு இன்று என்னவாகிவிட்டது? என்ற சிந்தனையுடன், அவன் முகம் பார்க்க, நெற்றியில் பளிச்சென தெரிந்த வெட்டுக் காயமும் அதனால் உண்டான சிறு வீக்கமும், இரவு நடந்தவற்றை அரைகுறையாய் அவளுக்கு உணர்த்தின. தவறு செய்த குழந்தை, தாயிடம் தயங்கித் தயங்கி மன்னிப்பு கேட்குமே… அவளது மன்னிப்புக்காக மருகுமே, அதே பரிதவிப்புடன் கண்ணாடிContinue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் # 33”

உறவாய் உயிராய்…!!! அத்தியாயம்#8

காலையில் மனு சொன்னது போல் கார் வந்து நிற்க, மதுராவும் பயிற்சி வகுப்புக்கு கிளம்பிவிட்டாள். அது பெண்களுக்கான பிரத்தியேக வகுப்பு. அங்கே அரிச்சுவடியில் இருந்து ஆரம்பிக்காமல் ஆபத்து நேரங்களில் தற்காத்துக் கொள்வதற்கான உத்திகள் சிறப்பாய் கற்றுக் கொடுக்கப்பட, மதுவும் ஆர்வமாகவே கற்றுக் கொண்டவள், அதனை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வர அங்கே இவளுக்காகவே காத்திருந்த மரியா, “மது, நேற்று ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என ஆரம்பிக்க ஒருநொடி மனுபரதன் செய்த அலுச்சாட்டியங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்தாலும்Continue reading “உறவாய் உயிராய்…!!! அத்தியாயம்#8”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #32

பிரபாவின் குடும்ப வழக்கப்படி மஞ்சள் கயிறில் தாலி கட்டுவது தான் பழக்கம். பெரிய இடமாயிற்றே வள்ளி மருமகளுக்கு ஐந்து பவுனில் தாலிக்கொடி வாங்கியிருந்தார். மங்களநாதம் ஒலிக்க பிரபா பவானியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான். அதன் பின்பு தான் அவனால் இலகுவாக இருக்க முடிந்தது. அதுவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பவானி திருமணத்தை நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. சிரித்த முகமாகவே தன்னோடு இசைந்து நிற்பவளை கண்டவனுக்கு தன்னை அறைந்தவளா இவள்? என்னும் பெரும் சந்தேகம்Continue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #32”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#7

‘நிச்சயம் இன்று கீழே விழுந்து அசிங்கப்படப் போகிறோம்’ என கண்மூடி பின்புறமாய் சரிய, அவளது இடையில் அவன் தன் கரம் பதித்து நேராய் தூக்கி நிறுத்த கடைசி க்ளிக்… ராபிட் ஃபயர் ரவுண்ட் அதோடு முடிவுக்கு வர, ” மது கண்ணை திற…” என கன்னம் தட்டி இயல்பிற்கு கொண்டு வர மரியா முயற்சிக்க, “சாரிக்கா…” பரிதாபமாய் சொன்னாள். “என் மேல மோதிட்டு அவங்ககிட்டே என்ன சாரி? இப்படி தான் சின்னப்பிள்ளை மாதிரி இத்தனை பேர் முன்னாலContinue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம்#7”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #31

பிரபா நந்தினியைப் பார்க்க வந்தான். முன்னை போல் இல்லாமல் இன்முகத்துடனேயே வரவேற்றார் சகுந்தலா தேவி. நண்பனுக்கு திருமணம் என தெரிந்ததும் ஒரே கொண்டாட்டம் நந்தினிக்கு. முதலில் இங்கிருந்து வெளியே செல்லலாம் என்று தான் தோன்றியது. “பிரபா, கடைசியில் பவானி தான் உன் காதல் மனைவியா?” கண் சிமிட்டி சிரிக்க, “காதலெல்லாம் இன்னும் வரல நந்து. கூடிய சீக்கிரம் வரவச்சுடலாம்…முதலாளி கேட்கும் போது தட்டமுடியல, அதோட அவளும் அர்ஜுன் நினைவில் இருந்து மீண்டு வரணும் இல்லையா அதான் சரின்னுContinue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #31”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #6

வேலையை முடித்துக் கொண்டு மதுரா வீட்டுக்கு வர அங்கே மணியும், குணாவும் ஆளுக்கொரு சைக்கிளில் பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு சுற்ற, ஆச்சர்யமும் மகிழ்வுமாய் “ஹேய்! சைக்கிள் கிடைச்சுடுச்சா? யார் வாங்கிக் கொடுத்தா?” என மதுரா குதூகலமாய் கேட்க, “நேற்று வந்த சார் தாங்க்கா…” பிள்ளைகள் எல்லோரும் கோரசாக சொல்ல, “மனு சாரா?” என்றவளால் நம்பவே முடியவில்லை. ‘நேற்று சைக்கிளின் தேவை பற்றி சொல்லும் போது கூட அதை காது கொடுத்து கேட்காமல் கோபமாய் போனவன் இன்று ஒன்றுக்குContinue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #6”

வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க எளிய வழிகள்:

வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க எளிய வழிகள்: நம் வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலே நம்மை நேர்மறையாக  இயங்க வைக்கும். மணத்திற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அப்படிப்பட்ட நேர்மறை ஆற்றலை எளிதாக உருவாக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக… 1. வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது: காலையில் எழுந்ததும் காசு பணம் கேட்காமல், காபி குடிக்காமல் புத்துணர்வு பெறச் செய்யும் ஒரே விஷயம், குளுமை. ஆம்! தோழமைகளே, எத்தனை பேர் இதை உணர்த்திருக்கிறீர்கள்? சிறிய வாசலை பெருக்கி,Continue reading “வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க எளிய வழிகள்:”

உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #5

தன் எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கப் போகும் சமயம் அவ்வறைக்குள் புயலாய் நுழைந்தான் மனுபரதன். அவனைக் கண்டதும் மதுரா பேந்த விழித்துக் கொண்டிருக்க மரியாவோ, “குட்மார்னிங் பாஸ்!” என சிரித்த முகமாய் அவன் முன்னே சென்று, அன்றைய வேலைகளை பட்டியலிட துவங்கிவிட்டாள். மெல்ல சுயம் பெற்ற மதுரா, ‘இனி இங்கிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை. இந்த வேலை வேண்டாம் என சொல்லிவிட்டு பாத்திரக்கடைக்கு கிளம்பினால் அரை நாள் சம்பளமாவது கிடைக்கும்’ எனும் நினைப்பில் அவனது மேசைக்கு அருகேContinue reading “உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #5”

உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #30

இதோ, மூன்று நாட்கள் ஓடிவிட்டது. அலுவலகத்திற்கும் போகவில்லை. பவானியிடம் அரை வாங்கியதில் இருந்து மீள முடியாமல் மறுகிக் கொண்டிருந்தான் பிரபா. நந்தினியை பார்க்கப் போனான். நிவியோடு பொழுதை கழித்தான். அன்னையோடு சத்துணவு கூடத்திற்கு கூட சென்று பார்த்துவிட்டான். ஒன்றும் அவன் மனநிலையை மாற்றுவதாக இல்லை. கடைசியில் ஆதிக்கு அழைத்து பேசியவுடனேயே இயல்புக்கு திரும்பினான். இனி அங்கு வேலை பார்க்க முடியாது என்னும் முடிவுக்கு வந்தவனாய் சிவானந்தத்தை பார்க்கச் செல்ல, இவனுக்கு முன்னால் தட்டு தடுமாறி உள்ளே நுழைந்துContinue reading “உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #30”

உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #4

“சாரி சார்…! உங்களை தப்பு சொல்லணும்ங்கிறது என்னோட நோக்கம் இல்லை. எங்களோட தேவைகள் அதிகம். மணியும், குணாவும் பக்கத்தூர் பாலிடெக்னிக்கில் படிக்கிறாங்க. பஸ் காசு கொடுக்க முடியாம நடந்து போயிட்டு வராங்க. இப்படி ஏதாவது காசு கிடைச்சா அவங்களுக்கு ஒரு சைக்கிள் வாங்கலாம்னு நினைச்சு தான் சொன்னேன். உங்களை கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சுடுங்க மனு சார். தப்பா பேசியிருந்தா என்னை தண்டிச்சுக்கோங்க. பணம் கொடுக்கிறதை நிறுத்திடாதீங்க. என்னால எல்லோரும் பட்டினி கிடக்கக் கூடாது. ப்ளீஸ் சார்… மன்னிச்சுடுங்க” அணையுடைத்தContinue reading “உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #4”